“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன்; கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு!” – வைகோ அசுர வேக உக்கிரம் நிறைந்த குற்றச்சாட்டு!

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜ அரசே ஒட்டுமொத்த வில்லனாகச் செயல்படுகிறது; வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம் என்று நாடகமாடிவிட்டு, உள்நோக்கத்துடன் பணிகளைத் தொடங்குங்கள் என கர்நாடகாவை மத்திய அரசு தொடர்ந்து பின்புலமாக இருந்து ஊக்குவித்து வருகிறது” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உக்கிரம் நிறைந்த மாஸ் குற்றச்சாட்டுகளை அசுர வேகத்தில் அதிரடியாக உடைத்துள்ளார். டெல்லியில் அண்மையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை […]

“தவெக அரசு பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி; அடுத்த முறை எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவது உறுதி!” – முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை: “மாநிலத்தில் தற்பொழுது நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு என்பது அப்பட்டமாக மத்திய பாஜக அரசின் ஒரு ‘ஜெராக்ஸ்’ (Xerox) போலச் செயல்படுகிறது; தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு அடியோடு கேள்விக்குறியாகி உள்ள நிலையில், ‘தவெக-வுக்கு ஏன் வாக்களித்தோம்?’ என்று சாமானிய மக்கள் தற்பொழுது ரத்தக் கண்ணீருடன் வருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உக்கிரம் நிறைந்த மாஸ் புகார்களை அசுர வேகத்தில் அதிரடியாக உடைத்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற திமுக மகளிரணியின் […]

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் மல்லாவி விவசாயிகளால் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மல்லாவி அனிஞ்சியன் குளம் பகுதியில் இருந்து பேரணியாக புறப்பட்ட விவசாயிகள் மல்லாவி மத்திய பேரூந்து நிலையம் வரையிலும் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன

கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்

தாய்லாந்து மன்னர் வஜிராலோங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டு அரச குடும்பத்தின் மிக முக்கியமான ஆளுமையுமான இளவரசி பஜ்ரகிதியாபா தனது 47ஆவது வயதில் காலமானார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தாய்லாந்து அரச மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது நாய்களுக்குப் பயிற்சியளித்துக் கொண்டிருந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரது இதயத்தில் ஏற்பட்ட ‘மைகோபிளாஸ்மா’ தொற்றினால் கடும் […]

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து

அசாமில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் விபத்துக்குள்ளானது. அசாம் ஜோர்கட் தளத்தில் தரையிறங்கியபோது விமானத்தில் தீப்பற்றியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விமானப்படை போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் ஏஎன்-32 ரக விமானம் தீப்பற்றி விபத்துக்குள்ளானது. விமானத்தில் முதலில் திடீரென தீப்பற்றியதால் வெடித்து சிதறியது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஓடுதளத்தில் தரையிறங்கிய சில நொடிகளில் விமானம் வெடித்து தீப்பற்றியது. விமானம் வெடித்து தீப்பிடித்தவுடன் அப்பகுதியில் கரும்புகை எழுந்தது.

ஆணாக மாறிய பெண்ணின் சடலம்; மொனராகலையில் சம்பவம்

மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்திற்குப் பதிலாக, ஆண் ஒருவரின் சடலம் வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பதல்கும்புர, அழுபொத்த கொலனி முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் ஜனாஸாவிற்கு பதிலாக ஆண் ஒருவரின் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் சடலத்தை சரியாக அடையாளம் காணாமல் வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். எனினும் சடலத்தை பிரேத அறையிலிருந்து ஒப்படைக்கும் போது அது துணியால் மூடப்பட்டிருந்ததாகவும், உறவினர்கள் அதனை அப்படியே பொறுப்பேற்று […]

இடை நிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2வது முனையக் கட்டுமானப் பணிகள் நவம்பரில் ஆரம்பம்

பொருளாதார நெருக்கடி காரணமாக இடையில் நிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) இரண்டாவது பயணிகள் முனையத்தின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மறுபடி தொடங்கப்பட்ட நாளில் இருந்து 30 மாதங்களுக்குள் அதனை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய […]

காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையிலான கடற்பரப்பில் பயணிக்க வேண்டாம்!

காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரும் வரை பயணிப்பதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், இக்கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மறு அறிவித்தல் வரும் வரை இக்கடற்பரப்புகளுக்குள் செல்ல வேண்டாம் என கடற்படையினருக்கும் கடற்றொழிலாளர் சமூகத்திற்கும் அறிவுறுத்திப்பட்டுள்ளது. […]

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

எரிபொருளுக்காக அரசாங்கம் வழங்கி வரும் மானியங்கள் ஜூன் மாதத்துடன் நிறைவடைவதாக பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள், அரசாங்க நிதி பற்றிய குழு முன்னிலையில் தெரிவித்துள்ளனர். இதன்போது, பொது நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அதிகாரிகள், எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அரசாங்கம் இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். எரிபொருள் நுகர்வைக் குறைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றும், அதற்கமையவே எரிபொருள் விலையை உயர்த்துவது போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர […]

‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’ ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பி.க்கள் கடிதம்!

‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’என்ற தலைப்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே கொடூரமான முறையில் நடத்தப்படுவதாக சமூகத்தில் எழுந்துள்ள விவாதங்களின் அடிப்படையிலேயே இந்த கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. தடுப்புக் காவலில் இருந்த உங்களது கட்சியின் ஸ்தாபகர் ரோஹண விஜேவீர படுகொலை செய்யப்பட்டு, உயிர் பிரிவதற்கு முன்பாகவே மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனமான யுகத்தின் கொடூரமான […]