இன்று காலை 9.30 மணிக்கு வலி வடக்கு தொகுதி அலுவலகத்தில் அன்னை பூபதி அம்மாவின் 38ஆம் ஆண்டு 18 ஆம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வு வலி வடக்கின் கௌரவ உறுப்பினர் குலத்துங்கம் வில்வராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். வலி வடக்கின் பிரதேச சபை கௌரவ உறுப்பினர் தயானி சந்திரன் அவர்கள் மலர் மாலையை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் சபையின் கௌரவ உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு மலர் தூவி தங்களது அஞ்சலியை செலுத்தினர்.