தமிழ் இனத்தின் விடிவுக்காகவும், தமிழர்களின் உரிமைக்காகவும் போராடி சாவினைத் தழுவிய வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் இன்றாகும்.
தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எங்கிலும் இன்று(27.11.2026) மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்படவுள்ளன.
இதனை முன்னிட்டு இரு மாகாணங்களிலும் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் மற்றும் பல்வேறு நினைவேந்தல் இடங்களில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தாயகம் எங்கிலும் மாவீரர் துயிலுமில்லம் அஞ்சலி நிகழ்வுகளுக்காக தயார் நிலையில்! | Mannar Maaveerar Thuyilum Illam Remembrance
மாவீரர்களை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மாலை 6.05 மணிக்கு மணியோசை ஒலிக்கச் செய்யப்பட்டு ஆரம்பமாகவுள்ளன. தொடர்ந்து 6.06 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, 6.07 மணிக்கு ஈகச்சுடர் ஏற்றப்படவுள்ளது.
கடந்த காலங்களை போன்றே இம்முறையும் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்துவதற்கு தேவையான சகல அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.