தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நவம்பர் 29 ஆம் திகதியளவில் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை ஒன்று உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்று (26) பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் அத்திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளதுடன், இதன் தாக்கத்தினால் நவம்பர் 30 ஆம் திகதியளவில் தெற்கு அந்தமான் கடற்பகுதி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை அண்டிய பகுதி மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், டிசம்பர் 2 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் இது மேலும் வலுவடைந்து குறைந்த காற்றழுத்த பிரதேசமாக மாறுவதற்கான குறைந்த சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
அதற்கமைய, இன்றைய தரவுகளின் அடிப்படையில் எதிர்வரும் 168 மணித்தியாலங்களுக்குள் இது தாழமுக்கமாக வலுவடைவதற்கான சாத்தியம் காணப்படுகிறது.
இதன் காரணமாக, மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.