பேலியகொடையிலுள்ள பயணிகள் சுயாதீனப் பொதிகள் களஞ்சியசாலையில் இருந்து பல மில்லியன் பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருட்கள் இன்று (26) கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை சுங்கப்பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த திடீர் சோதனையின் போது இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு குறித்த களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த 3 பொதிகளில் 18.193 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்பெறுமதி 181.93 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகை மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.