திருச்சி:
பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த திமுகவை இன்றைய தலைமை தில்லுமுல்லு கழகமாகவும், கொள்ளையர்களின் கூடாரமாகவும் மாற்றிவிட்டதாக மதிமுக எம்.பி. துரை வைகோ கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்:
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ எம்.பி., “மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பொது அமைதியைக் காத்திடும் விதமாக, ஆகம விதிகளுக்கு உட்பட்டுத் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றியதை பாஜக மற்றும் அதிமுகவைத் தவிர்த்து மதிமுக உள்ளிட்ட அனைத்து இயக்கங்களும் வரவேற்றுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள சிறுபான்மை அமைப்புகளும் இதனைப் பாராட்டியுள்ளன. திமுக மட்டும்தான் இதனை வெளிப்படையாகப் பாராட்டவில்லை,” என்று தெரிவித்தார்.
திமுக தலைமை மீது கடும் குற்றச்சாட்டு:
தொடர்ந்து பேசிய அவர், “மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, சமூகநீதி மற்றும் எளியவருக்கான அரசியல் கோட்பாட்டை முன்வைத்து அண்ணா திமுகவை ஆரம்பித்தார். இன்றளவும் அந்தக் கொள்கைப் பிடிப்பில் பலர் இருந்து வருகின்றனர். ஆனால் இப்போது அந்த திமுகவைத் தில்லுமுல்லு கழகமாகவும், கொள்ளையர்களின் கூடாரமாகவும் இன்றைய திமுக தலைமை மாற்றிவிட்டது. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரத்தில் அவர் மீது குற்றம் இருந்தால் முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். ஆனால், தில்லுமுல்லு கழகம் நானும் எம்.எல்.ஏ தவறு செய்யவில்லை என்று பேசியதாக இணையத்தில் பரப்பி வருகின்றனர்,” எனக் குற்றம் சாட்டினார்.
வைகோ குறித்த பதிவுகளுக்குக் கண்டனம்:
மேலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்துப் பேசிய துரை வைகோ, “84 வயது கொண்ட வைகோவுக்கு மறதி உள்ளது; உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறார். இளம் வயதினரைக் கொண்டு கேள்வி கேட்க வைத்து அவரை உணர்ச்சிவசப்படுத்தி அதில் திமுகவினர் சுகம் காண்கிறார்கள். என்னை அடியுங்கள், சோசியல் மீடியாவில் போடுங்கள், நான் பதில் தருகிறேன். 84 வயதுடைய மனிதரைச் சோசியல் மீடியாவில் போடுவதைக் கண்டிக்கிறேன்,” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
#DuraiVaiko #MDMK #DMK #Vaiko #TrichyNews #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive