சுவிசில் மாவீரர் பெற்றோர்,உரித்துடையோர் மதிப்பளிப்பு

சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரின் ஹொக்பெல்டன் (Hochfelden) பகுதியில் ‘மாவீரர் பெற்றோர், உறவினர், உரித்துடையோர் மதிப்பளிப்பு 2026’ நிகழ்வானது மணிக்கு நடைபெற்றது. மாவீரர் பெற்றோர், உறவினர், உரித்துடையோர் மண்டப வாயிலிலிருந்து மண்டபத்திற்குள் அழைத்து வரப்பட்டு, தமிழர் மரபிற்கமையப் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அதன் தொடர்ச்சியாகத் தமிழீழத் தேசியக் கொடியேற்றப்பட்டு, மாவீரர் திருவுருவப் படத்திற்கு மக்களால் மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அகவணக்கத்துடன் நிகழ்வுகள் சிறப்புற ஆரம்பமாகின. போராளிகள் கட்டமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒழுங்கு படுத்தப்பட்ட இந்நிகழ்வானது, தியாகத்தின் அடையாளமாகத் திகழும் […]
பிரித்தானியாவிலிருந்து இரகசிய ஒப்பந்தத்தின் கீழ் ஆபிரிக்க நாட்டிற்கு நாடுகடத்தப்பட்ட இலங்கை அகதி தற்கொலை?

பிரித்தானியாவிலிருந்து ஆப்பிரிக்க நாடொன்றிற்கு நாடுகடத்தப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்ட இலங்கைப் பிரஜை, பிரித்தானிய பாராளுமன்றத்திற்கோ அல்லது பொதுமக்களுக்கோ வெளிப்படுத்தப்படாத இரகசிய ஒப்பந்தமொன்றின் கீழேயே நாடுகடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய அரசாங்கத்துடன் எவ்விதத் தொடர்பும் இல்லாத ‘எஸ்வத்தினி’ (முன்னர் சுவாசிலாந்து) நாட்டிற்கே குறித்த நபர் இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளதாக பி.பி.சி (BBC) செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. கடுமையான மனநலப் பாதிப்பால் பீடிக்கப்பட்டிருந்தவரும், பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்டவருமான 35 வயதான கிஷாந்த் பெரமாலியா என்ற குறித்த நபர், […]
கானி (Kaani) புயலின் முழுப் பாதிப்பு வலயத்திற்குள் இலங்கை?

மலேசியாவின் பிந்துலு(Bintulu) பகுதிக்கு வடக்காக ஒரு காற்றுச் சுழற்சி புதன்கிழமை (25.11.2026) உருவாகியுள்ளது. இது வெள்ளிக்கிழமை (27.11.2026) மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து அந்தமான் தீவுகளுக்கு தெற்காக நகரும். அதன்பின் மத்திய வங்காள விரிகுடாவிற்கு வரும்போது அது புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு மாலைதீவு இட்ட ‘கானி( Kaani)’ என்ற பெயர் வழங்கப்படும். இந்த புயல் எதிர்வரும் 05.12.2026 அன்று இரவு திருகோணமலையின் ஊடாக ( கொட்டியாரக்குடாவுக்கு வடக்காக) கரையைக் கடந்து அதன் பின் மேற்கு […]
இனப்படுகொலை நடைபெற்றதை ஐ. நா. சபை அங்கீகரிப்பதற்கான சந்தர்ப்பத்தை பூகோள அரசியல் நிலைப்பாடு தடுத்து நிறுத்தியுள்ளது

தமிழர்களுக்கு இனப்படுகொலை நடைபெற்றது என்பதை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிப்பதற்கான சந்தர்ப்பத்தை பூகோள அரசியல் நிலைப்பாடு தடுத்து நிறுத்தியுள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். ஆகவே தமிழர்களை பொறுத்தமட்டில் இந்த பூகோள அரசியலை மையப்பாடாக கொண்டு தமிழர்கள் முடிவுகளை எட்ட வேண்டும் என்பதுடன், தமிழ்களின் இனத்துக்காக குரல் கொடுக்க கூடிய தலைமைகளை தெரிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு தமிழ் […]
23 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை

23 மாவட்டங்களுக்குப் பொருந்தும் வகையில் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதற்கமைய அநுராதபுரம், அம்பாறை, களுத்துறை, கேகாலை, கிளிநொச்சி, குருநாகல், கொழும்பு, கம்பஹா, காலி, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கும், நுவரெலியா, புத்தளம், பொலன்னறுவை, பதுளை, மட்டக்களப்பு, மன்னார், கண்டி, மாத்தளை, முல்லைத்தீவு, மொனராகலை, யாழ்ப்பாணம், இரத்தினபுரி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த அறிவிப்பு செல்லுபடியாகும். இன்று (25) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு இன்று இரவு 11.30 […]
விமான நிலையத்தில் வெடி குண்டுப் பீதி

ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ‘அசூர் எயார்’ நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்றில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக எழுந்த பீதியைத் தொடர்ந்து, குறித்த விமானம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, உஸ்பெகிஸ்தானிலிருந்து மத்தள விமான நிலையத்தை வந்தடையவிருந்த மற்றுமொரு விமானம், பாதுகாப்பு காரணங்களுக்காகக் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொஸ்கோவிலிருந்து மத்தள வந்தடைந்த அசூர் எயார் விமானத்தில் இவ்வாறு குண்டு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. […]