தனது திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவிலிருந்த பெண் பிரசவித்த பச்சிளம் குழந்தையை இரகசியமாகப் புதைத்ததாகக் கூறப்படும் 30 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அலவத்துகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபருடன் தொடர்பில் இருந்த 21 வயதுடைய பெண்ணிடமும் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த பொலிஸார், நீதிமன்ற உத்தரவின் பேரில் புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் சடலத்தைத் தோண்டி எடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக கண்டி சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர்.
அலவத்துகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஜனக சஞ்சீவ தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.