வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள்

தமிழ் இனத்தின் விடிவுக்காகவும், தமிழர்களின் உரிமைக்காகவும் போராடி சாவினைத் தழுவிய வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் இன்றாகும். தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எங்கிலும் இன்று(27.11.2026) மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்படவுள்ளன. இதனை முன்னிட்டு இரு மாகாணங்களிலும் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் மற்றும் பல்வேறு நினைவேந்தல் இடங்களில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாயகம் எங்கிலும் மாவீரர் துயிலுமில்லம் அஞ்சலி நிகழ்வுகளுக்காக தயார் நிலையில்! […]
நெதர்லாந்து கண்டி இராச்சியத்தின் துப்பாக்கிகளை மீள கையளிக்க முடிவு

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கண்டி இராஜ்ஜியத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இலங்கைக்கு உரித்தான இரண்டு துப்பாக்கிகளை மீண்டும் நாட்டிற்கே கையளிப்பதற்கு நெதர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுமார் 250 வருடங்களுக்கும் அதிக வரலாற்றை கொண்ட இந்த துப்பாக்கிகள் அந்த நாட்டின் எம்ஸ்டர்டெம் பகுதியிலுள்ள தேசிய அருங்காட்சியகமாக ‘Rijksmuseum’ல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் ஆய்வாளர்கள் மற்றும் இலங்கை ஆய்வாளர்கள் இணைந்து மிக நீண்ட ஆய்வுகளை நடாத்தியதில், இந்த துப்பாக்கிகள் இலங்கைக்கு சொந்தமானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 18 ஆம் நூற்றாண்டில் நெதர்லாந்திற்குக் […]
இந்து கோயில்களைப் பதிவு செய்ய விசேட வேலைத்திட்டம் – அமைச்சர் சுனில் செனவி

மலையக பிரதேசங்களில் உள்ள இந்து கோயில்களை பதிவு செய்யும் பணிகளை துரிதப்படுத்தவும், அதற்கான வசதிகளை வழங்கவும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சர்வமத கலாசாரத்தையும், மரபுரிமைகளையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று புத்தசாசனம் , மத விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (26) வியாழக்கிழமை நடைபெற்ற அமர்வின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, தோட்டப் பிரதேசங்களில் அமைந்துள்ள கோயில்களைப் பதிவு செய்வதில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பின் […]
சிசுவை புதைத்த தந்தை கைது

தனது திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவிலிருந்த பெண் பிரசவித்த பச்சிளம் குழந்தையை இரகசியமாகப் புதைத்ததாகக் கூறப்படும் 30 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அலவத்துகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபருடன் தொடர்பில் இருந்த 21 வயதுடைய பெண்ணிடமும் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த பொலிஸார், நீதிமன்ற உத்தரவின் பேரில் புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் சடலத்தைத் தோண்டி எடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக கண்டி சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர். […]
வீரத்தின் அடையாளமாய், தியாகத்தின் வரலாறாய் வாழும் மாவீரர்களை நினைவுகூரும் புனித நாள்…

மாவீரர் நாள் நினைவேந்தல் 2026 நிகழ்வு இன்று நவம்பர் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி முதல் Mississaugaவில் நடைபெறவுள்ளது. பேச்சு, கவிதை, தலைவர்களின் உரை மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகளுடன் மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்த அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.