ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படவில்லை… வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி

ஜனநாயகத்தை இல்லாதொழித்து நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. நிறைவடைந்த 2 ஆண்டு ஆட்சியில் ஜனநாயகத்துக்கு எதிராக நான் செயற்படவில்லை.

சட்டவாட்சியை முன்னிலைப்படுத்தியே செயற்பட்டுள்ளேன். ஆட்சியாளர் தவறிழைக்கும் போது அதனை சுட்டிக்காட்டும் உரிமை மக்களுக்கு உண்டு.மிகுதியாகவுள்ள பதவிக்காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். புதிய அரசியல் மாற்றத்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.ஆனால் ஊழல்வாதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதனால் தான் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்து கூட்டணியமைக்கிறார்கள்.இவர்களின் கூட்டணி அரசாங்கத்துக்கு சவாலல்ல என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அக்குரஸ்ஸ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் அரசியல் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நிறைவடைந்த இரண்டு ஆண்டுகாலப்பகுதியில் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊழலால் தான் இந்த நாடு வங்குரோத்து நிலையடைந்தது. மக்கள் எரிபொருளுக்காகவும்,அத்தியாவசிய பொருட்களுக்காகவும் வரிசையில் நின்றார்கள். வங்குரோத்து நிலையின் தாக்கத்தால் மக்கள் இன்றும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஊழலுக்கு எதிராக முன்னெடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால் கடந்த கால அரசாங்கங்களின் ஊழல் ஊடாக சலுகை மற்றும் வரபிரசாதங்களை பெற்றவர்கள் தான் தற்போது ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி ஒவ்வொரு மாதமும் ஏதாவதொரு பெயரில் கூட்டணியமைக்கிறார்கள். கூட்டணி அமைப்பதற்கான காரணம் அவர்களுக்கே தெரியாது. இவ்வாறான கூட்டணிகளை ஒரு பொருட்டாக கொள்வதே இல்லை.ஏனெனில் மக்கள் என்னுடன் உள்ளார்கள்.

நிறைவடைந்த இரண்டு ஆண்டுகாலப்பகுதியில் வெளியக ரீதியில் ஏற்பட்ட சவால்களை சிறந்த முறையில் வெற்றிக் கொண்டு பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளோம்.பொருளாதாரத்தின் உச்ச பயனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளேன். 2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பெருமளவிலான வரிகள் குறைக்கப்படும் அல்லது இரத்துச் செய்யப்படும்.

மீண்டெழும் செலவுகளுக்காக வரவு செலவுத் திட்டத்தில் 2000 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும். திறைசேரியை பாதுகாத்துக் கொண்டு தான் சகல அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுக்க வேண்டும். 2027 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் மக்களுக்கு பயனுடையதாகவே அமையும்.

ஜனநாயகத்தை இல்லாதொழித்து நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. கடந்த அரசாங்கங்கள் ஊடகவியலாளர்களை படுகொலை செய்தது, ஊடக நிறுவனங்கள் மீது குண்டுத்தாக்குதல் நடத்தியது. வெள்ளை வேன் கலாசாரம் அமுல்படுத்தப்பட்டது. இதனால் நாடு தான் பாரிய நெருக்கடிக்கு உள்ளானது. நிறைவடைந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படவில்லை. ஆட்சியாளர்கள் தவறிழைத்தால் அதனை சுட்டிக்காட்டும் உரிமை மக்களுக்கு உண்டு.

அனைவரும் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு அமைவாகவே செயற்பட வேண்டும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தியுள்ளேன்.ஆகவே சட்டத்துக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.நானும் சட்டத்துக்கு உட்பட்டே செயற்படுவேன். கடந்த காலங்களில் சட்டத்துக்கு அப்பாறட்ட வகையில் செயற்பட்டவர்கள் தற்போது சட்டத்துக்கு உட்பட மறுக்கிறார்கள். அதனால் பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. பதவிக்காலத்துக்குள் வழங்கிய சகல வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன். மக்கள் எமது அரசாங்கம் மீது முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அந்த நம்பிக்கையை பாதுகாப்பேன்.போலியான குற்றச்சாட்டுக்களால் மக்களின் நம்பிக்கையை சிதைக்க எவராலும் முடியாது என்றார்.

ne7

தேசிய மட்ட அமைதிப் பாத யாத்திரை

September 20, 2026

சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நீர்கொழும்பில் தேசிய மட்ட அமைதிப் பாத யாத்திரையும்

pa

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 16 பேர் பலி

September 20, 2026

பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கு அருகே உள்ள கோஹாட் காவல்படை வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப் படை தாக்குதலில் 5 காவலர்கள் உட்பட

WhatsApp Image 2026-09-20 at 15.25.28

நற்பிட்டிமுனையில் அனோஜனை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

September 20, 2026

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்

mo

வாகன முறைப்பாடுகளுக்கு புதிய அவசர உதவி இலக்கம்

September 20, 2026

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் புதிய வட்ஸ் அப் அவசர உதவி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 074 245 3300 என்ற இந்த

WhatsApp Image 2026-09-20 at 8.44.04 PM

எரிபொருள் விலை மீண்டும் உயருமா..! அவசர பேச்சுக்கு தயாராகும் இலங்கை

September 20, 2026

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மீதான நிதிச்சுமையை குறைக்கும் வகையில் புதிய எரிபொருள் மானியத்

WhatsApp Image 2026-09-20 at 8.39.41 PM

ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படவில்லை… வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி

September 20, 2026

ஜனநாயகத்தை இல்லாதொழித்து நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. நிறைவடைந்த 2 ஆண்டு ஆட்சியில் ஜனநாயகத்துக்கு எதிராக நான் செயற்படவில்லை.

WhatsApp Image 2026-09-20 at 8.35.22 PM

காணிகளை விடுவிக்காது ஏமாற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்! பலாலி மக்கள் குற்றச்சாட்டு

September 20, 2026

மக்களின் காணி மக்களுக்கு என வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த அநுர தலைமையிலான அரசாங்கம் இரண்டு வருடங்கள் கடந்தும் வலி

WhatsApp Image 2026-09-20 at 8.15.59 PM

“ஒரு உயிரைக் காப்போம்” அனோஜனுக்காக திரண்ட மக்கள் – கையெழுத்து சேகரிப்பு

September 20, 2026

சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுவரும் அம்பாறை – நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை உயிருடன் மீட்டு நாட்டுக்கு அழைத்து

WhatsApp Image 2026-09-20 at 7.54.45 PM

அதிதீவிர மண்சரிவு மற்றும் வெளியேற்ற எச்சரிக்கை !

September 20, 2026

தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலாளர்

WhatsApp Image 2026-09-20 at 7.50.47 PM

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் புதிய அறிவிப்பு !

September 20, 2026

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துச் சென்றாலும், உள்நாட்டில் மானியங்கள் ஊடாக எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் தொடர்ந்தும்

WhatsApp Image 2026-09-20 at 7.46.21 PM

அரச சேவைக்கு புதிதாக 121,000 பேர் !

September 20, 2026

இந்த வருடத்தில் அரச சேவைக்கு புதிதாக 121,000 பேர் இணைத்துக்கொள்ளப்படுவர் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். மாத்தறை, அக்குரஸ்ஸவில்

WhatsApp Image 2026-09-20 at 7.38.24 PM

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி மக்கள் தீபமேந்திப் பிரார்த்தனை!

September 20, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை செய்யக் கோரி சம்மாந்துறை