சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, கல்முனை – நற்பிட்டிமுனை பகுதியில் கடந்த ஞாயிறு சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அனோஜனுக்கு சவூதி அரேபியாவில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் தண்டனையை மீளாய்வு செய்து, அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை சவூதி அரேபிய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.