சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நீர்கொழும்பில் தேசிய மட்ட அமைதிப் பாத யாத்திரையும் ஒன்று்கூடல் நிகழ்வும் நடைபெற்றது.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவரும் தற்போதைய தேசிய அமைப்பாளருமான ஹேமந்த குமார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில், இலங்கையின் 25 மாவட்டங்களினதும் பிரசைகள் குழுப் பிரதிநிதிகளும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட பிரதிநிதிகளும் பங்குபற்றினர்.
காலை 9:30 மணிக்கு நீர்கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய பாத யாத்திரை, நகர வீதிகள் ஊடாக நடைபெற்று, இறுதியாக நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள முகாந்திரம் மைதானத்தை வந்தடைந்தது. தொடர்ந்து சமாதான தீபம் ஏற்றப்பட்டதுடன், அனைத்து மதகுருமார்களின் முன்னிலையில் அவர்களின் ஆசியுரைகளுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றன.
இந்நிகழ்வில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒன்றிணைந்த சமாதான பிரகடனமும் வெளியிடப்பட்டது.