த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையே தான் போட்டி – மு.க.ஸ்டாலின் பேச்சு…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது. 75 ஆண்டுகள் ஒரு கட்சி நிலைத்திருப்பது சாதாரணம் அல்ல. 75 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே கம்பீரத்துடன் திமுக உள்ளது. தி.மு.க பார்க்காத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை.எதிரி யார் என கணித்து பணியாற்றி இருந்தால் சட்டமன்ற தேர்தலில் தோல்வியே ஏற்பட்டு இருக்காது.நமக்கும் அவர்களுக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் 17 லட்சம் தான்.நமது கூட்டணி கட்சிகளின் […]
விடுதலைப் புலிகளின் தலைவருக்கு உருவச்சிலை அமைக்க அனுமதிப்பீர்களா..

வடக்கில் தற்போது திலீபனுக்கு உருவச்சிலை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் எதிர்காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் உருவச்சிலை அமைக்க இந்த அரசாங்கம் அனுமதியளிக்குமா என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி தொடுத்திருந்தார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், வடக்கில் திலீபனுக்கு உருவச்சிலை அமைக்கப்பட்டு, நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளமை இலங்கை இராணுவத்தை அவமதிக்கும் ஒரு செயற்பாடாகும். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் […]
வவுனியாவில் தாயும் மகனும் சடலமாக மீட்பு!

வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், தூக்கில் தொங்கிய நிலையில் மகனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். குறித்த சடலங்கள் இன்று (19.09) மாலை மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாயும் அவரது மகனும் இருந்துள்ளனர். இந்த நிலையில் உறவினர் இருவர் மாலை குறித்த வீட்டிற்கு சென்ற போது தாய் இரத்த காயங்களுடன் வீட்டின் பிரதான அறையில் வீழ்ந்து […]
இலங்கைக்கு விடுத்துள்ள அபாய எச்சரிக்கை!

இலங்கையின் கடன் மீளச் செலுத்தும் திறன் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கையின் கடன் நிலைபேறுதன்மை நிலவினாலும், அது தொடர்பான ஆபத்துக்கள் இன்னும் அதிக மட்டத்திலேயே காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் மதிப்பீடு செய்துள்ளது. அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதத்துடன் தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் நிறைவடையும் போதும் இந்த அதிக ஆபத்துள்ள நிலைமை நீடிக்கும் என நாணய நிதியத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2026 மே 28 அன்று இலங்கை […]
நாட்டிற்கு எதிராகச் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்குத் தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்: “நாட்டிற்கு எதிராகச் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என் மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு சாமர சம்பத் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் சவால் விடுத்திருந்தேன். ஆனால், இதுவரை […]
அஜித் ரோஹணவுக்கு பொலிஸ் மா அதிபர் வாழ்த்து

38 வருட பெருமைமிக்க பொலிஸ் சேவையின் பின்னர் ஓய்வுபெறும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி கலாநிதி அஜித் ரோஹணவின் எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் தலைமையில் சிறப்பு சந்திப்பொன்று நடத்தப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அஜித் ரோஹணவின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர். 1966 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி பிறந்த அஜித் ரோஹண, கனம்பெல்ல ஜூனியர் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், கொழும்பு ஆனந்தா […]
3 யுவதிகள் உட்பட நான்கு பேர் மாஓயாவில் மூழ்கி மாயம்!

திவுலப்பிட்டிய, படல்கம, பேரகஸ்மங்கட பகுதியில் மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று யுவதிகள் உட்பட நான்கு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நான்கு யுவதிகளும் இளைஞர் ஒருவரும் மாஓயா ஆற்றில் நீராடச் சென்றுள்ள நிலையில், அவர்களில் நால்வர் பாதுகாப்பற்ற பகுதியில் நீராடிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது, யுவதிகளில் ஒருவர் நீரில் மூழ்கியதாகவும், அவரைப் காப்பாற்ற முயன்றபோதே ஏனைய மூவரும் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன மூன்று […]