நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி காலமானார்

சென்னை: மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – கமலா தம்பதியின் மூத்த மகளும், திரைப்படத் தயாரிப்பாளருமான சாந்தி நாராயணசாமி (71) உடல்நலக் குறைவால் இன்று (செப். 20) சென்னையில் காலமானார். முக்கியத் தகவல்கள்: குடும்பப் பின்னணி: கடந்த சில நாள்களாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவருக்கு ராம்குமார், நடிகர் பிரபு ஆகிய இரு சகோதரர்களும், தேன்மொழி என்ற சகோதரியும் உள்ளனர். திரைத்துறைப் பங்களிப்பு: பொதுவெளியில் […]

தேசிய மட்ட அமைதிப் பாத யாத்திரை

சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நீர்கொழும்பில் தேசிய மட்ட அமைதிப் பாத யாத்திரையும் ஒன்று்கூடல் நிகழ்வும் நடைபெற்றது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவரும் தற்போதைய தேசிய அமைப்பாளருமான ஹேமந்த குமார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில், இலங்கையின் 25 மாவட்டங்களினதும் பிரசைகள் குழுப் பிரதிநிதிகளும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட பிரதிநிதிகளும் பங்குபற்றினர். காலை 9:30 மணிக்கு நீர்கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய பாத […]

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 16 பேர் பலி

பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கு அருகே உள்ள கோஹாட் காவல்படை வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப் படை தாக்குதலில் 5 காவலர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். 50 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பொலிஸ் தலைவர் ஜுல்பிகர் ஹமீத், கோஹாட் காவல் படை வளாகத்தில் உள்ள மசூதி ஒன்றில் தற்கொலைப் படை தாக்குதல் நிகழ்ந்தது. வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட […]

நற்பிட்டிமுனையில் அனோஜனை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, கல்முனை – நற்பிட்டிமுனை பகுதியில் கடந்த ஞாயிறு சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அனோஜனுக்கு சவூதி அரேபியாவில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் தண்டனையை மீளாய்வு செய்து, […]

வாகன முறைப்பாடுகளுக்கு புதிய அவசர உதவி இலக்கம்

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் புதிய வட்ஸ் அப் அவசர உதவி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 074 245 3300 என்ற இந்த இலக்கத்தின் மூலம், மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்யும் போது ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் வாகனங்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பான எழுத்துமூல முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும். மோட்டார் போக்குவரத்து ஆணையாளரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சேவை, பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை நேரடியாகவும் இலகுவாகவும் முன்வைப்பதற்கான வழியை ஏற்படுத்துவதுடன், அவற்றுக்கு உரிய நேரத்தில் பதிலளிப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் […]

எரிபொருள் விலை மீண்டும் உயருமா..! அவசர பேச்சுக்கு தயாராகும் இலங்கை

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மீதான நிதிச்சுமையை குறைக்கும் வகையில் புதிய எரிபொருள் மானியத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை அரசாங்கம் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நாளிதழ் ஒன்றிடம் இதனைத் தெரிவித்துள்ளதுடன், நிலைமையை கருத்திற்கொண்டு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். எரிபொருள் விலைகள் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் இராணுவ பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் […]

ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படவில்லை… வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி

ஜனநாயகத்தை இல்லாதொழித்து நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. நிறைவடைந்த 2 ஆண்டு ஆட்சியில் ஜனநாயகத்துக்கு எதிராக நான் செயற்படவில்லை. சட்டவாட்சியை முன்னிலைப்படுத்தியே செயற்பட்டுள்ளேன். ஆட்சியாளர் தவறிழைக்கும் போது அதனை சுட்டிக்காட்டும் உரிமை மக்களுக்கு உண்டு.மிகுதியாகவுள்ள பதவிக்காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். புதிய அரசியல் மாற்றத்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.ஆனால் ஊழல்வாதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தான் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்து கூட்டணியமைக்கிறார்கள்.இவர்களின் கூட்டணி அரசாங்கத்துக்கு சவாலல்ல என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அக்குரஸ்ஸ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை […]

காணிகளை விடுவிக்காது ஏமாற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்! பலாலி மக்கள் குற்றச்சாட்டு

மக்களின் காணி மக்களுக்கு என வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த அநுர தலைமையிலான அரசாங்கம் இரண்டு வருடங்கள் கடந்தும் வலி வடக்கு காணிகளை விடுவிக்காது கபட நாடகம் ஆடுவதாக பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.   இன்றையதினம்(20.9.2026)பலாலி காணி விடுவிப்பு கோரி மக்கள் போராட்டம் 14ஆவது வாரமாக இடம்பெற்ற நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்தனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் […]

“ஒரு உயிரைக் காப்போம்” அனோஜனுக்காக திரண்ட மக்கள் – கையெழுத்து சேகரிப்பு

சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுவரும் அம்பாறை – நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை உயிருடன் மீட்டு நாட்டுக்கு அழைத்து வருவதற்கான உரிய இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, நற்பிட்டிமுனை பகுதியில் இன்று (20) விசேட கையெழுத்து சேகரிப்பும் கவனயீர்ப்பு மன்றாட்டமும் முன்னெடுக்கப்பட்டன. “ஒரு உயிரைக் காப்போம்; மனிதாபிமானத்துடன் கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளில் இந்தக் கவனயீர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது. சமூக ஊடகப் பதிவொன்றைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சிவராசா அனோஜனுக்கு ஆரம்பத்தில் 5 வருட சிறைத்தண்டனையும் […]

அதிதீவிர மண்சரிவு மற்றும் வெளியேற்ற எச்சரிக்கை !

தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் அதிதீவிர 3ஆம் கட்ட (சிவப்பு) மண்சரிவு மற்றும் வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, அரநாயக்க, தெரணியகல, மாவனெல்ல மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு, அம்பகமுவ மற்றும் […]