மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் புதிய வட்ஸ் அப் அவசர உதவி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
074 245 3300 என்ற இந்த இலக்கத்தின் மூலம், மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்யும் போது ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் வாகனங்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பான எழுத்துமூல முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சேவை, பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை நேரடியாகவும் இலகுவாகவும் முன்வைப்பதற்கான வழியை ஏற்படுத்துவதுடன், அவற்றுக்கு உரிய நேரத்தில் பதிலளிப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வாகனப் பதிவு தொடர்பான தாமதங்கள், முறைகேடுகள் அல்லது வாகனங்களின் இயக்கத்தால் ஏற்படும் பொதுமக்கள் அசௌகரியங்கள் மற்றும் இடையூறுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான முறைப்பாடுகளை வட்ஸ் அப் செய்தி மூலம் எழுத்துமூலமாக சமர்ப்பிக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.