ஈரானுடனான தங்களது தொடர்பு மற்றும் ஆதரவு இருந்தபோதிலும், ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்இந்தப் போரின் முதல் நான்கு வாரங்கள் வரை அமைதி காத்தனர். ஆனால் தற்போது, யேமனின் தலைநகர் சனா (Sanaa), நாட்டின் வடக்கு மற்றும் பிற பகுதிகளைத் தன்வசம் வைத்துள்ள அந்த இயக்கம், இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை வீசி தனது முதல் நகர்வை மேற்கொண்டுள்ளது. “முக்கியமான இஸ்ரேலிய இராணுவத் தளங்களையே” தாம் குறிவைத்ததாகஹெளத்திகள் கூறுகின்றனர்.
ஹெளத்திகள் தங்களது ஏவுகணை வீச்சு மூலம் இஸ்ரேலுக்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தல், ஈரானுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவு என்பது உண்மைதான். 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து காசாவில் போர் வெடித்தபோது, ஹமாஸிற்கு ஆதரவாக அந்த அமைப்பு பலமுறை இஸ்ரேலை நோக்கித் தாக்குதல் நடத்தியது. ஆனால் பல மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்த அந்தத் தாக்குதல்கள், இஸ்ரேலுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
ஹெளத்திகள் எங்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறார்கள் என்றால், அது யேமன் கடற்கரையோரத்தில்தான்.
ஹமாஸிற்கு ஆதரவளிப்பதன் ஒரு பகுதியாக, யேமனுக்கும் ஆப்பிரிக்காவின் கொம்பு (Horn of Africa) பகுதிக்கும் இடையே செங்கடலின் தெற்கு முனையில் அமைந்துள்ள பாப் அல்-மண்டேப் (Bab al-Mandab) ஜலசந்தி வழியாக வரும் கப்பல்களை அந்த அமைப்பு குறிவைத்தது. அவர்களின் அந்த நடவடிக்கை அப்போதே முக்கிய வணிக கடல் வழியை ஆபத்துக்குள்ளாக்கியது.
அவர்கள் மீண்டும் அவ்வாறு செய்தால், அது உலகப் பொருளாதாரத்திற்கு மற்றுமொரு பெரும் அடியாக இருக்கும்.
ஈரான் (Strait of Hormuz) ஏறக்குறைய மூடியுள்ள நிலையில், வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்திற்கான உலகின் இரண்டு முக்கிய மூலோபாய நீர்வழிகளும் துண்டிக்கப்படக்கூடிய சாத்தியம் உள்ளது.
ஹௌதிகள் இதற்கு முன்னரும் செய்தது போல, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற தனது அண்டை வளைகுடா நாடுகளின் எரிசக்தி மற்றும் இராணுவக் கட்டமைப்புகளையும் குறிவைக்கக்கூடும். முன்பு ஹௌதிகள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, அவர்களின் தலைமை மற்றும் இராணுவத் திறனை அழிக்கும் நோக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடமிருந்து தீவிர வான்வழித் தாக்குதல்களை எதிர்கொண்டனர்.
இருப்பினும், ஹௌதிகள் அந்தத் தாக்குதல்களைத் தாங்கித் தப்பிப்பிழைத்ததாகத் தெரிகிறது. இப்போது கேள்வி என்னவென்றால், இந்த இயக்கம் எந்த அளவிற்குச் செல்லத் தயாராக உள்ளது என்பதுதான். ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக தாக்குதல்களை நடத்தியபோது, அவர்களுக்கு உள்நாட்டிலும் பிராந்திய அளவிலும் ஓரளவு அங்கீகாரம் கிடைத்தது. ஆனால், ஈரானுக்காகச் செய்வது என்பது வேறு விஷயமாக இருக்கலாம்.
ஏமன் தேசத்தைப் பொறுத்தவரை மற்றொரு சிக்கலும் உள்ளது. பல வருட கொந்தளிப்பு மற்றும் போருக்குப் பிறகு, ஏமன் தற்போது ஓரளவிற்கு அமைதியாக இருக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போரில் ஹௌதிகள் ஆழமாக ஈடுபடுவது, அந்த நாட்டுக்குள் மீண்டும் ஒரு உள்நாட்டுப் போர் வெடிக்கத் தூண்டக்கூடும்.
ஹௌதிகள் தங்கள் தாக்குதல்களைத் தொடர்ந்து தீவிரப்படுத்தினால், அது போரின் புதிய விரிவாக்கத்தைக் குறிக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.