காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் முன்னைய அரசியல்வாதிகள் முயற்சி எடுத்திருந்தால் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்க முடியும் – நீதி அமைச்சர் 

கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் முன்னைய   அரசியல்வாதிகள் முயற்சி எடுத்திருந்தால் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்க முடியும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று (19) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் காணாமல்போன ஆட்களை பதிவு செய்யும் அலுவலகமான ஓ.எம்.பி. அலுவலகத்தின்  ஏற்பாட்டில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம மட்டங்களில் சேவையாற்றுகின்ற அமைப்புகளின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பேசிய அமைச்சர்,

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு, மக்கள் நலன் சார்ந்த சட்டமொன்றைக் கொண்டுவருவோம். அந்தச் சட்டம் உண்மையாகவே பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவே கொண்டுவரப்படுகிறதே தவிர, தனிநபர்களையோ அல்லது வேறு தரப்பினரையோ ஒடுக்குவதற்காக அல்ல. இன்னும் இரண்டு மாத காலத்துக்குள் அதனை சமர்ப்பிப்போம்.

கடந்த காலங்களில் காணாமல் போனவர்கள் விடயத்தில் அரசியல்வாதிகள் முயற்சி எடுத்திருந்தால் இதற்கான தீர்வினை கண்டிருக்க முடியும். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் சகவாழ்வு, நல்லிணக்கம். ஒற்றுமை என்பவற்றை அமைப்பதற்கு முடியாமல் போயிருக்கிறது.

இந்த அரசாங்கம் அதற்கான முயற்சிகளை எடுக்கும் தமிழர்களை இரண்டாம் பிரஜைகளாக பார்க்கின்ற எந்தவொரு சந்தர்ப்பங்களுக்கும் இனி இடமளிக்கப் போவதில்லை. அனைவரும் ஒற்றுமையுடன் பார்க்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்‌ஷ சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றிருந்ததாக தெரிவித்து வந்தாரே தவிர, இந்த அலுவலகங்களை செயற்படுத்த விடவில்லை. குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்களின் அழுத்தங்கள் காரணமாகவே இந்த அலுவலகங்கள் பேரளவில் ஆரம்பிக்கப்பட்டன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், பாராளுமன்ற உறுப்பினர்களான திலகநாதன் இளங்குமரன் மற்றும் அமைச்சின் செயலாளர், காணாமல்போன ஆட்களை பதிவு செய்யும் அலுவலகத்தின் தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,