கல்வி மற்றும் சமூக மாற்றத்திற்கான ஒரு வழிகாட்டி ‘அபியோகய’ – பிரதமர்

நவீன உலகின் சவால்கள், மீளெழும் திறன் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கு “அபியோகய” (சவால்) எனும் இந்த நூல் ஒரு காத்திரமான, காலத்திற்குப் பொருத்தமான பங்களிப்பாகும். அத்தோடு, கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூக மாற்றத்திற்கான பெறுமதிமிக்க நுண்ணறிவையும் இந்நூல் கற்றுக்கொடுக்கின்றது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர் பேராசிரியர் சுரங்க நாணயக்காரவினால் எழுதப்பட்ட “அபியோகய – உங்கள் வெற்றிக் கதையை நீங்களே எழுதுங்கள்” எனும் நூலின் வெளியீட்டு விழா, 2026 மார்ச் 28 பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் […]
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மலையக அரசியல் அரங்கத்தினால் கையெழுத்து சேகரிப்பு

மலையக மக்களின் பிரதான பிரச்சினைகளில் ஒன்று, அரச சேவைகள் அவர்களிடம் சரியாக சென்றடையாமையாகும். அரச சேவைகள் மக்களை சென்றடைய வேண்டுமாயின் முறையான நிர்வாக அதிகார பகிர்வு அவசியமாகும். ஆனால், மலையக தமிழர்கள் செறிவாக வாழும் நுவரெலியா மாவட்டத்தில், பிரதேச செயலகங்கள் ஊடான நிர்வாக அதிகாரப் பகிர்வை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதில் தொடர்ந்தும் பாரபட்சம் காட்டப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மலையக அரசியல் அரங்கத்தினால் ஞாயிற்றுக்கிழமை (29) அன்று நோர்வூட் நகரில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் […]
ஏப்ரல் முதலாம் திகதி முதல் எரிபொருள் ஏற்றுமதியை தடை செய்கிறது ரஷ்யா

மெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு, எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் பெற்றோல் ஏற்றுமதியைத் தடை செய்ய ரஷ்யா தீர்மானித்துள்ளது. ரஷ்யாவின் உள்நாட்டுச் சந்தையில் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் நிலையான விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு அளவு அதே மட்டத்தில் இருந்தபோதிலும், உள்நாட்டில் எரிபொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் தட்டுப்பாட்டைத் […]
பொதுஜன பெரமுனவின் மாவட்ட அமைப்பாளர்களாக ஹரிணி விஜேதுங்க மற்றும் கருப்பையா ராமகிருஷ்ணன்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) மாவட்ட மட்டத்திலான தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில், கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவினால் பிரபல பெண் தொழிலதிபர் ஹரிணி விஜேதுங்க மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் கருப்பையா ராமகிருஷ்ணன் ஆகியோர் மாவட்ட அமைப்பாளர்களாக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாமல் ராஜபக்ஷவினால் நேரடியாக வழங்கப்பட்ட இந்த நியமனங்கள், வரவிருக்கும் அரசியல் காலப்பகுதிக்கு முன்னதாக கட்சியின் கட்டமைப்புக்குள் தொழில்சார் நிபுணத்துவம் மற்றும் ஊடக ஆளுமைகளை உள்வாங்கும் நோக்கை வெளிப்படுத்துகின்றன. இலங்கையின் வர்த்தகத் துறையில் முக்கிய நபராகவும், அர்ப்பணிப்புடன் […]
பந்தயம் கட்டி மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டி: 11 இளைஞர்கள் கைது

பிலியந்தலை – கெஸ்பேவ மாற்று வீதியில் பணத்திற்கு ஒட்டயம் வைத்து மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி பந்தயங்களில் ஈடுபட்ட 11 இளைஞர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்கள் வசம் இருந்த 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 02 முச்சக்கரவண்டிகள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன. கெஸ்பேவ மாற்று வீதிக்கு நேற்று சனிக்கிழமை (28) இரவு 7.30 மணிக்கு வருமாறு வாட்ஸ்அப் குழுவொன்றின் ஊடாக விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, குறித்த இளைஞர்கள் அந்த இடத்திற்கு […]
அரிசி வர்த்தகர்களுக்கு மேல் வழக்கு

அரிசியைக் கையிருப்பில் வைத்துக்கொண்டு, அதனைச் சில்லறை விலைக்கு விற்பனை செய்ய மறுத்த சில வர்த்தகர்களுக்கு எதிராக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைமையகத்தின் ஊழல் தடுப்புப் பிரிவினரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, இன்று (29) காலை கிருலப்பனை பொதுச் சந்தை தொகுதியில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பண்டிகைக் காலத்தில் அரிசி மற்றும் அத்தியாவசிய உணவுகள் தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகார […]
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் தாக்குதலுக்கு பென்டகன் தயாராகிறது – ‘தி போஸ்ட்’ செய்தி

மத்திய கிழக்கில் போர் ஐந்தாவது வாரமாக நீடித்து வரும் நிலையில், கார்க் தீவு மற்றும் ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள கடலோரப் பகுதிகள் மீதான தாக்குதல்கள் உட்பட, ஈரானில் பல வார கால தரைவழி நடவடிக்கைகளுக்கு பென்டகன் தயாராகி வருவதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டங்களில் சிறப்பு நடவடிக்கைப் படையினர் மற்றும் வழக்கமான காலாட்படையினரின் திடீர்த் தாக்குதல்கள் இடம்பெறலாம். ஆனால் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்த திட்டங்களில் எதற்காவது ஒப்புதல் அளிப்பாரா என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது […]
கடுமையாக சேதமடைந்த அமெரிக்க இராணுவ விமானம்

அமெரிக்க இராணுவ செய்திகளை வெளியிடும் ஃபேஸ்புக் பக்கத்தில் முதலில் பகிரப்பட்ட இந்தப் புகைப்படங்களில், E-3 Sentry ரக விமானம் இரண்டு துண்டுகளாகப் பிளந்து கிடப்பது தெரிகிறது. : இந்தப் புகைப்படங்கள் சவுதி தலைநகர் ரியாத்திற்கு தென்கிழக்கே சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள இளவரசர் சுல்தான் (Prince Sultan) விமான தளத்தில் எடுக்கப்பட்டவை என்பதை பிபிசி (BBC) உறுதிப்படுத்தியுள்ளது. புகைப்படங்களில் காணப்படும் மின் கோபுரங்கள், சேமிப்பு அலகுகள் மற்றும் தரை அடையாளங்கள் செயற்கைக்கோள் படங்களுடன் ஒத்துப்போகின்றன. விமான […]
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பதவி விலக வேண்டும் – நாமல்
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கம் செய்யப்பட்டுள்ளது.ஒன்று இவர் பதவி விலக வேண்டும். அல்லது ஜனாதிபதி இவரை பதவி நீக்க வேண்டும். ஊழல் மோசடியாளர்களை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு ஜனாதிபதியால் எவ்வாறு ஊழலுக்கு எதிராக செயற்பட முடியும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். […]
சிறுமியிடம் அத்துமீறிய பிக்கு விளக்கமறியலில்; நாவற்குழியில் சம்பவம்!

நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு, சிறுமியைத் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி, விகாரை வளாகத்தில் வடிகட்டிய நீரினைப் பெறுவதற்காக சனிக்கிழமை சென்ற வேளை, விகாரைக்குப் புதிதாக வந்த இளநிலை பிக்கு அச் சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்த நிலையில், தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், […]