சர்வதேச சந்தையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 1.4 சதவீதமாகச் சரிந்துள்ளது. மத்திய வங்கியின் வாராந்திர பொருளாதாரத் தரவு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு,மொத்த பணப்புழக்கப் பற்றாக்குறை ரூபா 288.31 பில்லியனுக்கு அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பில்கள் மற்றும் பத்திரங்களின் மதிப்பில் ஏற்பட்ட ஒரு சிறிய சரிவைத் தவிர, அவற்றின் மதிப்பு பெருமளவில் நிலையாக இருந்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் […]

இலஞ்சம் பெற்ற பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

மொனராகலை பிரதேச சபையின் வருமான வரிப் பரிசோதகர் ஒருவர், வர்த்தகர் ஒருவரிடமிருந்து இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்ட போது இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை பகுதியில் டெண்டர் அடிப்படையில் மாட்டிறைச்சிக் கடை மற்றும் பொது மலசலகூடத்தை நடத்திவரும் இரு வர்த்தகர்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டது. குறித்த வர்த்தக நிலையங்களை சீல் வைக்காமல் இருப்பதற்கும், நிலுவையில் உள்ள டெண்டர் தவணைப் பணத்தைச் செலுத்த அவகாசம் பெற்றுத் தருவதற்கும் உதவியாக […]

லெபனானில் மூன்று பத்திரிகையாளர்களின் மரணம்; ஒரு கடுமையான எச்சரிக்கை மணி!

லெபனானில் மூன்று பத்திரிகையாளர்களின் மரணம், “பிராந்தியத்திலும் உலகிலும் உள்ள ஊடக சமூகத்திற்கு ஒரு பெரும் இழப்பு மட்டுமல்ல, உலகளாவிய மனசாட்சிக்கு ஒரு தீவிரமான விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது” என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். ஹிஸ்புல்லா குழுவால் நடத்தப்படும் அல் மனார் தொலைக்காட்சியின் செய்தியாளர் அலி ஷோயப் மற்றும் அல் மயாதீன் செய்தியாளர்கள் பாத்திமா, முகமது ஃபெடோனி ஆகியோர் ஜெஸ்ஸின் நகரில் நடந்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர். சமூக ஊடகத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், […]

நாளை அதிக வெப்பநிலை

நாளை (30) மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நிலவக்கூடிய வெப்பமான வானிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதால், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும், வெளிப்புறச் செயற்பாடுகளில் ஈடுபடுவதும் உடலில் சோர்வு நிலையை ஏற்படுத்தக்கூடும் […]

ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவுறுத்தல்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பு தற்போது சீரமைக்கப்பட்டு வருவதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, கடந்த மார்ச் 23, 24 மற்றும் 26 ஆகிய திகதிகளில் பத்தரமுல்ல ‘சுஹுருபாய’ தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களுக்கு ஒருநாள் சேவையின் கீழ் வருகை தந்து, தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போன விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரம், நாளை (30) ஒருநாள் சேவையின் ஊடாக அடையாள அட்டைகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அந்த விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் […]

மாணிக்கக்கல் வர்த்தகரைக் காணவில்லை!

கஹவத்தை – நீலகம வீதியில் மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் தொடர்பாக கஹவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு காணாமல் போனவர் கஹவத்தை, கட்டங்கே பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று (28) நண்பகல் வேளையில், இந்த மாணிக்கக்கல் வர்த்தகர் கஹவத்தை – நீலகம வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவரது மோட்டார் சைக்கிள் கஹவத்தை – நீலகம […]

இன்று முதல் வலுசக்தியை பாதுகாக்க “சுரகிமு லங்கா” திட்டம்

வலுசக்தியை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட “சுரகிமு லங்கா” தேசிய திட்டம் இன்று (29) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. மின்சக்தி வளங்களை மிகவும் பொறுப்புடன் பாதுகாக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலினால் நாட்டின் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய தடைகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வானிலை மாற்றங்கள் குறித்த கணிப்புகளைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு […]

விசேட தேடுதல் நடவடிக்கை: 635 சந்தேகநபர்கள் கைது!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் நாளாந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது நேற்று (28) 635 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது 29,191 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களில் இந்த எண்ணிக்கையிலான சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், திறந்த பிடியாணை […]

இந்தியாவில் இருந்து எரிபொ​ருள்; மோடிக்கு நன்றி கூறிய அநுர

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து எரிபொ​ருள் கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்றித் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எக்ஸ் கணக்கில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கு மோதலினால் இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் விநியோகத் தடைகள் குறித்து சில நாட்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடினேன். இந்தியாவின் விரைவான ஆதரவிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று 38,000 மெட்ரிக் […]

போர் தொடங்கி 30 நாட்கள்!

ஈரானின் உத்தியோகபூர்வ IRNA செய்தி நிறுவனம் உள்ளிட்ட ஈரானிய ஊடகங்கள், போர் தொடங்கி 30 நாட்கள் நிறைவடைவதை முன்னிட்டு அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) விடுத்துள்ள செய்தியை வெளியிட்டுள்ளன. அந்தச் செய்தியில் காலிபாப் குறிப்பிட்டுள்ள முக்கிய கருத்துக்கள்: இரட்டை வேடம்: “எதிரி பொதுவெளியில் பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறார், ஆனால் அதே நேரத்தில் ரகசியமாக ஒரு தரைவழித் தாக்குதலுக்கான திட்டங்களை தீட்டி வருகிறார்.” அமெரிக்காவின் கோரிக்கைகள்: “அமெரிக்கா 15 அம்சப் பட்டியலை […]