ஈரானின் உத்தியோகபூர்வ IRNA செய்தி நிறுவனம் உள்ளிட்ட ஈரானிய ஊடகங்கள், போர் தொடங்கி 30 நாட்கள் நிறைவடைவதை முன்னிட்டு அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) விடுத்துள்ள செய்தியை வெளியிட்டுள்ளன.
அந்தச் செய்தியில் காலிபாப் குறிப்பிட்டுள்ள முக்கிய கருத்துக்கள்:
இரட்டை வேடம்: “எதிரி பொதுவெளியில் பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறார், ஆனால் அதே நேரத்தில் ரகசியமாக ஒரு தரைவழித் தாக்குதலுக்கான திட்டங்களை தீட்டி வருகிறார்.”
அமெரிக்காவின் கோரிக்கைகள்: “அமெரிக்கா 15 அம்சப் பட்டியலை முன்வைத்து, தனது விருப்பங்களை திணிக்க முயல்கிறது. போர்க்களத்தில் எதை அடைய முடியவில்லையோ, அதை இதன் மூலம் சாதிக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள்.”
தரைவழிப் போர் எச்சரிக்கை: “அமெரிக்க வீரர்கள் தரைவழியாக ஈரானுக்குள் நுழைவதற்காக ஈரானியப் படைகள் காத்திருக்கின்றன. அவர்கள் உள்ளே நுழைந்தால், அவர்கள் மீது நெருப்பு மழையைப் பொழியப் படைகள் தயாராக உள்ளன.”
அடிபணிய மறுப்பு: ஈரானின் சரணடைதல் குறித்து அரபு மொழியில் கருத்துத் தெரிவித்த அவர், “ஈரானின் செய்தி மிகவும் தெளிவானது, அது ஒருபோதும் அவமதிப்பை (humiliation) ஏற்றுக்கொள்ளாது” என்று வலியுறுத்தியுள்ளார்.