வடமராட்சியில் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்ற இளைஞன் கைது
ழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடமிருந்து குறிப்பிட்ட அளவு போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது, குறித்த இளைஞன் பளைப் பகுதியில் உள்ள ஒரு போதைப்பொருள் வியாபாரியிடமிருந்து இவற்றை வாங்கி வந்து, வடமராட்சிப் பகுதியில் விற்பனை செய்து வந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். : இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போதைப்பொருளை விநியோகித்ததாகக் கூறப்படும் பளையைச் சேர்ந்த பிரதான போதைப்பொருள் வியாபாரியைக் கைது […]
புதிய கட்சி தொடங்கியிருக்கும் சசிகலாவுக்கு நடிகர் கார்த்திக் ஆதரவு

புதிய கட்சி தொடங்கியிருக்கும் சசிகலாவை சந்தித்த நடிகர் கார்த்திக், சட்டப்பேரவைத் தேர்தலில் தனது ஆதரவை தெரிவித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ், ‘அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியிருக்கும் சசிகலா ஆகியோர் கூட்டணி அமைத்து சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளனர். இந்நிலையில் போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலாவை நடிகர் கார்த்திக் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அனைத்திந்திய ஃபார்வார்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவராக இருந்த கார்த்திக், தற்போது மனித […]
வீடுகளில் வசிப்போருக்கான பொலிஸார் அறிவுறுத்தல்
வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை திறந்து வைப்பவர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளனர். தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக மேற்கொள்ளப்படும் குறித்த நடவடிக்கைகளால் பதிவாகும் திருட்டு சம்பவங்களைத் தடுப்பதற்காக வீட்டு உரிமையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் மேலும், வெப்பநிலை அதிகரித்து வருவதால் பல குடியிருப்பாளர்கள் காற்றோட்டத்திற்காக இரவில் ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்து வைக்கின்றனர். இந்நிலையில், இத்தகைய பழக்கவழக்கங்கள் குற்றவாளிகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கக்கூடும். வசதிக்காக பாதுகாப்பை புறக்கணிக்க கூடாது. வீட்டு உரிமையாளர்கள் […]
இன்று முதல் நெடுந்தாரகை சேவை ஆரம்பம்

நெடுந்தீவிற்கான கடற்போக்குவரத்தில் பழுதடைந்த நெடுந்தாரகை இன்று (29.03.2026) முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நேற்றுமுன்தினம் (27.03.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று (28) நெடுந்தாரகையை நேரடியாக பார்வையிட்டு தற்காலிக திருத்த நடவடிக்கையை வடபிராந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் புடிக்ஹ லியனகமகே மேற்கொண்டுள்ளார். நெடுந்தாரகை சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம் | Long Distance Service Resumes From Today அதன்பிறகு, இன்று (29) முதல் […]
ஹார்முஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ட்ரம்ப் திட்டம்!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோகப் பாதையான ஹார்முஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். இது குறித்துப் பேசியுள்ள பிரிட்டிஷ் இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சர் பேட்ரிக் சாண்டர்ஸ் (General Sir Patrick Sanders), நாம் ஏற்கெனவே ‘மூன்றாம் உலகப் போரின்’ (WW3) வாசலில் நிற்பதாக எச்சரித்துள்ளார். “ஹார்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்கா தரைப்படை ஆக்கிரமிப்பைத் தொடங்கினால், […]
ஹட்டன் மாணவன் தாக்குதல் தொடர்பான பின்னணி

ஹட்டன் பகுதியில் மாணவர்கள் குழுவாக மற்றொரு மாணவரை தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்ப விசாரணைகளின் படி, இந்த சம்பவம் சுமார் 21 நாட்களுக்கு முன்பு, மார்ச் மாத தொடக்கத்தில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவன் மற்றொரு மாணவன் புகைபிடித்ததை ஆசிரியரிடம் தெரிவித்ததுதான் இந்த தாக்குதலுக்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மாணவன், மேலும் இரு மாணவர்களுடன் சேர்ந்து அந்த மாணவரை தாக்கியதாக பொலிஸ் தகவல் வெளியிட்டுள்ளது. சம்பவம் நடந்த […]
இது விஜய்க்கும் ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் தேர்தல்!

“இந்த தேர்தல் இருமுனைப் போட்டி மட்டும்தான். மக்கள் கூட்டணியான நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி. இது விஜய்க்கும், ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் தேர்தல்” என தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் விஜய் பேசினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) நடந்த நிகழ்ச்சியில், தவெகவின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, அக்கட்சியின் வேட்பாளர்களையும் விஜய் அறிமுகப்படுத்தினார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், […]
மாநகரசபையினால் வவுனியாவில் அகற்றப்பட்ட நடைபாதை வியாபார நிலையங்கள்

வவுனியா மாநகரசபையினால் நடைபாதை வியாபார நிலையங்கள் அகற்றப்பட்டுள்ளன. சித்திரை புத்தாண்டு வரவுள்ள நிலையிலே மக்களிற்கு இடையூறாக காணப்பட்டு வரும் நடைபாதை வியாபார நிலையங்களை மாநகரசபை ஆணையாளர் சிவரஞ்சினியின் பணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வருமான பரிசோதகர் முசாதீர் தலைமையிலான குழுவினரால் குறித்த செயற்பாடானது முன்னெடுக்கப்பட்டது. வவுனியா ஹொரவப்பத்தான வீதி, சந்தை சுற்றுவட்ட வீதி, மன்னார் வீதி, தொடருந்து நிலைய வீதிகளில் மக்களிற்கு இடையூறாகவும், போக்குவரத்திற்கு இடையூறாகவும் ஆக்கிரமித்து காணப்பட்ட நடைபாதை வியாபார நிலையங்களே இவ்வாறு அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வன்முறை காரணமாக லெபனானில் மனிதாபிமான நெருக்கடி…

லெபனானில் தீவிரமடைந்து வரும் வன்முறை காரணமாக சுமார் 10 லட்சம் மக்கள் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக யுனிசெஃப் (UNICEF) அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், நாளொன்றுக்கு சராசரியாக 19,000 சிறுவர்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். கடந்த 21 நாட்களில் மட்டும் சுமார் 3,70,000 சிறுவர்கள் அகதிகளாக மாற்றப்பட்டுள்ளனர். இது ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் நூற்றுக்கணக்கான பாடசாலை பேருந்துகள் நிறைய சிறுவர்கள் தங்கள் உயிரைக் காக்க ஓடுவதற்கும் […]
பரந்தனில் பயணிகளுடன் தரக்குறைவாக நடந்த நடத்துநருக்கு பணித்தடை

பயணிகளுடன் தரக்குறைவாக நடந்துகொண்டமை உள்ளிட்ட இருவேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தனியார் பேருந்து நடத்துநருக்கு 8 நாட்கள் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த 07.03.2026 அன்று அதிகார சபையின் திடீர்பரிசோதனை உத்தியோகத்தர்கள், பேருந்தில் பரிசோதனையில் ஈடுபட்டபோது, குற்றப்பத்திரிகை வழங்க அனுமதிப்பத்திரத்தைக் கோரிய அதிகாரிகளை குறித்த நடத்துநர் அவமதித்துள்ளார். அத்துடன், 26.03.2026 அன்று காலை பரந்தனிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட சேவையின்போது அவர் தரக்குறைவாகப் பேசியுள்ளமையும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. […]