பொது அவசரகால நிலை நீடிப்பு

ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர், டி. என். எஸ். நந்திக சனத் குமாநாயக்க வெளியிட்டுள்ளார். டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நாட்டில் பொது அவசரநிலை நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், பொதுப்பாதுகாப்பையும், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், அரச கூட்டுத்தாபனம், அரசாங்கத் திணைக்களம், உள்ளூராட்சி நிறுவனம், கூட்டுறவுச் சங்கம் அல்லது அவற்றின் […]

புதிய சுதந்திர முன்னணி தலைவர் பொலிஸாரால் கைது

புதிய சுதந்திர முன்னணியின் கட்சியின் தலைவர் அமித் வீரசிங்க, கண்டி பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பெண் ஒருவரைத் தாக்கியமை தொடர்பான முறைப்பாடு குறித்து விசாரணை நடத்துவதற்காக, கண்டி பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துக்கு அமித் வீரசிங்க அழைக்கப்பட்டிருந்தார். இதன்போது, பொலிஸ் நிலையத்துக்குள் அவர் மிகவும் அமைதியற்ற முறையிலும், கலாட்டாவிலும் ஈடுபட்டார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமித் வீரசிங்கவுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ள பெண், அவரது அலுவலகத்தில் பணிபுரியும் […]

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள் ‘இலங்கையின் ஒற்றுமைக்கு பாதிப்பானவை’ என இலங்கைச் சுங்கம் தடுப்பு!

தான் எழுதிய நூல்கள் கொழும்பில் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் தீபச்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். நடுகல், பயங்கரவாதி, சயனைட், எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன் போன்ற நூல்கள் இந்தியாவில் இருந்து கப்பலில் பொதியாக வந்தவேளையில், ‘இலங்கையின் ஒற்றுமைக்கு பாதிப்பானவை’ என்று காரணம் கூறப்பட்டு இலங்கை சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டடுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்கும் பட்சத்திலேயே புத்தகங்கள் விடுவிக்கப்படும் என்று சுங்கப் பிரிவு அறிவித்துள்ளது. […]

பஹ்ரைனில் உள்ள உலகின் மிகப்பெரிய அலுமினிய ஆலை மீது ஈரான் தாக்குதல்!

பஹ்ரைனில் உள்ள உலகின் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தி ஆலை மீது ஈரான் நேற்று (28) தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஆலையில் பணிபுரிந்த இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். இதற்கமைய, அந்நிறுவனம் தற்போது சேதங்களை மதிப்பிட்டு வருவதாகவும், தனது தொழிலாளர்களின் பாதுகாப்பே முதன்மையான முன்னுரிமை என்றும் கூறியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக, தனது உற்பத்தித் திறனில் சுமார் 19% ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் முன்னதாக கூறியிருந்தது. ஈரானில் உள்ள இரண்டு ஆலைகள் மீதான தாக்குதல்களுக்குப் […]

அர்ட்டெமிஸ் விண்வெளி வீரர்கள் நிலவுக்குச் செல்லும் இறுதிக்கட்டப் பயிற்சிகளில்…

நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘அர்ட்டெமிஸ்’ (Artemis) திட்டத்தின் கீழ் நிலவுக்குச் செல்லவுள்ள விண்வெளி வீரர்கள், தங்களது பயணத்திற்கான இறுதிக்கட்டப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பல தசாப்தங்களுக்குப் பிறகு மனிதர்களை மீண்டும் நிலவின் மேற்பரப்பிற்கு அழைத்துச் செல்லும் இந்தத் திட்டம், விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விண்வெளி வீரர்கள், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதற்கும், அங்குள்ள கடினமான சூழலைச் சமாளிப்பதற்கும் தேவையான நவீன தொழில்நுட்பப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். […]

அந்த 7 தங்கங்களும் தப்பிவிட்டார்கள் – த்ரிஷா

இன்னுமா த்ரிஷா அந்த வீடியோவை வெளியிடவில்லை என்று ரசிகர்கள் காத்திருந்தார்கள். இந்நிலையில் அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வீடியோவை இன்ஸ்டா ஸ்டோரியில் போஸ்ட் செய்துவிட்டார் த்ரிஷா. நாய்கள் வீடியோ: சீனாவில் நாய்க்கறிக்காக ஒரு வாகனத்தில் கடத்தப்பட்ட ஏழு நாய்கள் தப்பித்து நெடுஞ்சாலையில் நடந்து தானாக வீடு சேர்ந்தன என்று ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் ஆளாளுக்கு ஷேர் செய்ததால் வைரலானது. ஏழு நாய்களும் ஒன்றாக சேர்ந்து தங்களின் உரிமையாளர்களின் வீடுகளை நினைவில் வைத்துக் கொண்டு பத்திரமாக திரும்பி வந்துவிட்டன. […]

‘கர’ படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்களின் தோற்றம் குறித்த புகைப்படங்கள்…

தமிழ் திரையுலகத்தின் பெருமைமிகு அடையாளமும், பான் இந்திய நட்சத்திர நடிகருமான தனுஷ் கதையின் நாயகனாக நடித்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் ‘கர’ படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்களின் தோற்றம் குறித்த புகைப்படங்கள் கடந்த சில தினங்களாக தொடர்ந்து வெளியானது. இதைத் தொடர்ந்து கதாபாத்திரங்களின் தோற்றம் தொடர்பான காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள’ கர ‘ திரைப்படத்தில் தனுஷ், மமீதா பைஜு […]

அர்ஜுன் பிரபாகரன் நடிக்கும் ‘பேட்டில்’

நடிகர் அர்ஜுன் பிரபாகரன் இளம் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘பேட்டில்’ எனும் தமிழ் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் பா. நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேட்டில்’ திரைப்படத்தில் அர்ஜுன் பிரபாகரன், ஆராத்யா, முனிஸ்காந்த், சரவண சுப்பையா, சுப்பிரமணியம் சிவா, சுருளி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர் .யுவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீவா இசையமைத்திருக்கிறார். அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை எலைட் டாக்கீஸ் நிறுவனம் […]

ரவீந்திர தீப் குலசேனவின் உரிமை கோரல் சட்டவிரோதம் – லங்கா சமசமாஜக் கட்சி எச்சரிக்கை

லங்கா சமசமாஜக் கட்சிக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக பொதுச் செயலாளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை எனவும் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்தி போலியான பிரசாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அக்கட்சியின் அரசியல் குழு மற்றும் மத்திய குழு உறுப்பினருமான சந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் கூறுகையில் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவராகவும் பொதுச் […]

அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கிக்கப்பல் கிரீட் தீவில் பற்றி எரிந்தது

ஈரானுடனான மோதல் களத்தில் இருந்து அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட விலை உயர்ந்த போர்க்கப்பல் விலக்கி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலின் சில பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட விலை உயர்ந்த போர்க்கப்பல் உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலாக கூறப்படும், USS Gerald R Ford, 1,106 அடி நீளம் கொண்டதாகும். இந்த கப்பல் ஒரு வருடம் வரை போர்ப் பணிகளில் இருந்து விலகி இருக்க நேரிடலாம் என்று […]