ரவீந்திர தீப் குலசேனவின் உரிமை கோரல் சட்டவிரோதம் – லங்கா சமசமாஜக் கட்சி எச்சரிக்கை

லங்கா சமசமாஜக் கட்சிக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக பொதுச் செயலாளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை எனவும் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்தி போலியான பிரசாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அக்கட்சியின் அரசியல் குழு மற்றும் மத்திய குழு உறுப்பினருமான சந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்

லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் செயற்பட்ட பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் மறைவைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் வெற்றிடம் நிலவி வருகின்றது. இப்பதவி குறித்து கட்சியின் உட்புறத்தில் எழுந்துள்ள பிணக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை கட்சியின் பொதுச் செயலாளர் யார் என்பது தொடர்பில் தீர்மானிப்பதை தேர்தல் ஆணைக்குழுவும் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளது. நிலைமை இவ்வாறு இருக்கையில் கடந்த சில தினங்களாக ரவீந்திர தீப் குலசேன என்பவர் தான்தான் லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் என அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் தொடர்ச்சியாகத் தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றார்.

இச்செயற்பாடானது கட்சியின் கௌரவத்திற்கும் இடதுசாரி அரசியல் பாரம்பரியத்திற்கும் பெரும் இழுக்கை ஏற்படுத்தியுள்ளது.தற்போது கட்சியின் மத்திய குழு அரசியல் குழு மற்றும் பொருளாளர் உள்ளிட்ட உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் அனைவரும் கட்சி காரியாலயத்திலேயே ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

கடந்த 10 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக எமது பொருளாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதமே அதற்கான சான்றாகும். கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை மீளக் கட்டியெழுப்புவதற்கு நாம் தயாராகி வரும் இவ்வேளையில் இவ்வாறான போலி உரிமை கோரல்களை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது.

இலங்கையின் இடதுசாரி வரலாற்றில் மாபெரும் தலைவர்களால் கட்டிக்காக்கப்பட்ட இக்கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதை ரவீந்திர தீப் குலசேன உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். எமது பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதனைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவருக்கு எதிராக மிக விரைவில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் பகிரங்கமாக அறிவிக்கின்றோம் என்றார்.

ve

தவிசாளர் வேலு யோகராஜின் பிணை மனு நிராகரிப்பு

April 17, 2026

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜின் பிணை கோரிக்கையை

Gamini

கத்தோலிக்க திருச்சபையினர் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் குறித்து திருப்தி!

April 17, 2026

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்ட வருவதாக கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ

iran

கைதான இந்திய கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்

April 17, 2026

கிளிநொச்சி – இரணைதீவு கடற்பரப்பிற்குள் கடந்த 9ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கைதான

srines

இனப்பிரச்சினைக்கு பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது!

April 17, 2026

பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று இவர்கள் நினைக்கின்றார்கள், அப்படியல்ல. நிச்சயமாகப் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்படுமாக இருந்தால்

kap

ஸ்ரீலங்கன் முன்னாள் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரின் பிணை மனு நிராகரிப்பு

April 17, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த

i

இலங்கை வருகிறார் இந்தியத் துணை குடியரசுத் தலைவர்

April 17, 2026

இந்தியத் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், 2026 ஏப்ரல் 19 முதல் 20 வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வப் பயணம்

qr

நாளை நள்ளிரவு முதல் மீண்டும் QR முறைமை

April 17, 2026

நாளை (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்காக மீண்டும் QR முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

jail

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது

April 17, 2026

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு

tv

த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

April 17, 2026

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யுனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பன

wat

நான்கு நாட்களில் 20 பேர் நீரில் மூழ்கிப் பலி!

April 17, 2026

கடந்த ஏப்ரல் 12 முதல் நேற்று (16) வரையிலான நான்கு நாட்களில் மட்டும், நீரில் மூழ்கி 20 பேர் துரதிர்ஷ்டவசமாக

jey

நிலக்கரி கொள்வனவு ஊழல் அழுத்தங்கள்; எரிசக்தி அமைச்சர் இராஜினாமா!

April 17, 2026

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தனது பதவியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ

sr air

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் பிரதான அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்

April 17, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின்