திக்கம் வடிசாலையை மீள இயக்க நடவடிக்கை!

யாழ்ப்பாணம் திக்கம் வடிசாலையை மீள இயக்கி, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

திக்கம் வடிசாலையை மீள இயக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் இணைத் தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, திக்கம் வடிசாலையை மையப்படுத்திப் பனை அபிவிருத்திச் சபைக்கும் தனியார் நிறுவனமொன்றுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் சட்டவலுவை ஆராய்ந்து, சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த ஒப்பந்தம் கடந்த 2022ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டதுடன், 25 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகப் பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனினும், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னர் வடிசாலை மூடப்பட்டமை மற்றும் அதனைமீள இயக்குவதில் காணப்படும் சட்டச் சிக்கல்கள் தொடர்பில் விரிவாக ஆராய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த காலங்களில் திக்கம் வடிசாலை முடங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், கூட்டுறவுச் சங்கத்தினருக்குத் தெரியாமல் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்த அரசாங்கம் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், ஒப்பந்தம் தொடர்பான சிக்கல்களைக் காரணமாகக் கொண்டு வடிசாலையைத் தொடர்ந்து முடங்கிய நிலையில் வைத்திருக்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், அதனை மீள இயக்குவதற்கான தடைகளை நீக்கி, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய ஒப்பந்தத்தின் காரணமாகக் கூட்டுறவுச் சங்கத்தினருக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்காத நிலை காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, ஒப்பந்தத்தின் சட்டவலுவை ஆராய்வதுடன், அனுமதிப்பத்திரத்தைச் சங்கத்தின் வசம் வைத்துக்கொண்டு தனியார் முதலீட்டாளர்களுடன் இணைந்து வடிசாலையை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, வடமராட்சி பனை, தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள், தமது கொத்தணியின் பெயரில் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டால், ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட முதலீட்டாளர்களுடன் இணைந்து வடிசாலையைச் செயற்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.

கலந்துரையாடலின் முடிவில், திக்கம் வடிசாலையை மீள இயக்குவதற்கான சாத்தியமான அனைத்து வழிகளையும் ஆராய்ந்து, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான திட்டங்களைத் தயாரிப்பதற்கும், இதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

 

IMG_9428

விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம்

October 14, 2026

சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம் ஒன்றைத் நிறுவுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார

IMG_9427

திக்கம் வடிசாலையை மீள இயக்க நடவடிக்கை!

October 14, 2026

யாழ்ப்பாணம் திக்கம் வடிசாலையை மீள இயக்கி, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில், நீரியல்

IMG_9425

இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

October 14, 2026

பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, உம்ரா யாத்திரை மேற்கொள்ளத் திட்டமிடும் இலங்கையர்கள் தமது பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போது அவதானத்துடன்

IMG_9424

ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளதால் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.

October 14, 2026

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சிக்கு அதிக ஆதரவு உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அவசரகால நிலை மற்றும்

nsm

மீண்டும் விளக்கமறியலில் நாமல்!

October 14, 2026

சர்ச்சைக்குரிய எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கலில் 1.4 மில்லியன் யூரோவுக்கும் அதிகமான தொகையை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில், பாராளுமன்ற

wor

உலக வங்கிப் பிரதிநிதிகள் – ஜனாதிபதியின் செயலாளர் சந்திப்பு!

October 14, 2026

இலங்கையின் விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் நவீனமயமாக்குதலை நோக்கமாகக் கொண்ட ‘AgriConnect Sri Lanka’ திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர்

th

ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக திக்கம் வடிசாலையை மீளச் செயற்படுத்தத் திட்டம்!

October 14, 2026

திக்கம் வடிசாலையை மீள இயக்குவதற்குச் சாத்தியமான அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், அதனை ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக

ja

கைதடியில் விபத்து; இரு இளைஞர்கள் பலி

October 14, 2026

யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

kek

நீதிமன்ற அவமதிப்பு – கெஹெலிய உள்ளிட்டோருக்கு எதிராக மனு

October 14, 2026

யர்நீதிமன்ற உத்தரவொன்றை அமுல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட

MediaFile_20261013_115703_992

கொழும்பில் 15 தற்காலிக வீடுகள் தீக்கிரை!

October 14, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் – மஹவத்த பழைய ரயில் பாதைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 15 தற்காலிக

Toronto-Election-1536x783

அக்டோபர் 26 நகராட்சித் தேர்தலில் கத்தோலிக்கர்கள் பங்கேற்க கர்தினால் லியோ அழைப்பு!

October 13, 2026

2026 அக்டோபர் 26 திங்கள்கிழமை நகராட்சித் தேர்தலை முன்னிட்டு, டொராண்டோ பேராயர் கர்தினால் பிராங்க் லியோ (Cardinal Frank Leo)

TORONTO ELE1

டொராண்டோ நகராட்சித் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்க சாதனை அளவிலான வாக்காளர்கள்

October 13, 2026

டொராண்டோவின் வரவிருக்கும் 2026 நகராட்சித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த வாரம் நடைபெற்ற ஆறு நாள் முன்கூட்டிய வாக்குப்பதிவில் 2,20,000-க்கும் மேற்பட்ட