விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம்

சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம் ஒன்றைத் நிறுவுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சிமாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இதனை அறிவித்தார். நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர் தொழில்நுட்ப ஆற்றல்களை வலுப்படுத்தவும், வேலைவாய்ப்புச் சவால்களுக்குத் தீர்வு காணவும் திட்டமிடப்பட்டுள்ள இந்த மையத்திற்கான அமைச்சரவை ஒப்புதல் அடுத்த வாரம் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மூலம் ஆண்டுதோறும் […]
திக்கம் வடிசாலையை மீள இயக்க நடவடிக்கை!

யாழ்ப்பாணம் திக்கம் வடிசாலையை மீள இயக்கி, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். திக்கம் வடிசாலையை மீள இயக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் இணைத் தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, திக்கம் […]
இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, உம்ரா யாத்திரை மேற்கொள்ளத் திட்டமிடும் இலங்கையர்கள் தமது பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போது அவதானத்துடன் செயற்படுமாறு ஜித்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில், சவூதி அரேபியாவிற்கான மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானச் சேவைகள் பாதிக்கப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உம்ரா யாத்திரைக்குத் திட்டமிட்டுள்ளவர்கள் தமது யாத்திரைக் குழுக்களின் பிரதிநிதிகள் அல்லது பயண முகவர்களுடன் தொடர்ச்சியாகத் தொடர்பில் இருக்குமாறும் துணைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், அவசர […]
ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளதால் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சிக்கு அதிக ஆதரவு உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அவசரகால நிலை மற்றும் ஆளுநர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளதால் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியின் தலைமையிலான மாகாண அரசாங்கத்தின் அதிகாரங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மாகாணத்தில் அதிகரித்து வரும் பயங்கரவாதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே அரசியலமைப்புக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. மாகாண […]
மீண்டும் விளக்கமறியலில் நாமல்!

சர்ச்சைக்குரிய எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கலில் 1.4 மில்லியன் யூரோவுக்கும் அதிகமான தொகையை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக வழக்கிற்காக நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமை பெயரிடுமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த வழக்கு நேற்று(13) கொழும்பு பிரதம நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார […]
உலக வங்கிப் பிரதிநிதிகள் – ஜனாதிபதியின் செயலாளர் சந்திப்பு!

இலங்கையின் விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் நவீனமயமாக்குதலை நோக்கமாகக் கொண்ட ‘AgriConnect Sri Lanka’ திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயகவுக்கும் உலக வங்கிப் பிரதிநிதிகளுக்கும் இடையே கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான உலக வங்கி குழுமத்தின் முகாமையாளர் கேவோர்க் சர்க்சியான் (Gevorg Sargsyan) தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். இத்திட்டத்தின் தொடக்க […]
ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக திக்கம் வடிசாலையை மீளச் செயற்படுத்தத் திட்டம்!

திக்கம் வடிசாலையை மீள இயக்குவதற்குச் சாத்தியமான அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், அதனை ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக மீளச் செயற்படுத்துவதற்கான திட்டங்களைத் தயாரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், திக்கம் வடிசாலையை மையப்படுத்திப் பனை அபிவிருத்திச் சபைக்கும் தனியார் நிறுவனத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் சட்டவலு தொடர்பில் ஆராய்ந்து, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பெருந்தோட்ட மற்றும் சமூக […]
கைதடியில் விபத்து; இரு இளைஞர்கள் பலி

யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த புன்னாலைக்கட்டுவான் தெற்கை சேர்ந்த 20 மற்றும் 23 வயதுடையே இரு இளைஞர்களே விபத்தில் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. அதிவேகமாக பயணித்த குறித்த மோட்டார் சைக்கிள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் லொறியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு […]
நீதிமன்ற அவமதிப்பு – கெஹெலிய உள்ளிட்டோருக்கு எதிராக மனு

யர்நீதிமன்ற உத்தரவொன்றை அமுல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா’ (Transparency International Sri Lanka) அமைப்பு உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது. மருந்துகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்ற முறைகேடு காரணமாக அடிப்படை மனித உரிமைகளை மீறியமைக்காக, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல 75 மில்லியன் ரூபாயையும், சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த, தேசிய மருந்துகள் […]
கொழும்பில் 15 தற்காலிக வீடுகள் தீக்கிரை!

கொழும்பு, கிராண்ட்பாஸ் – மஹவத்த பழைய ரயில் பாதைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 15 தற்காலிக வீடுகள் முற்றாக தீக்கிரையாக்கியுள்ளன. நேற்று அளவில் இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் இருந்த சுமார் 21 தற்காலிக வீடுகள் தீ விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதுடன், தற்போது தீப்பரவல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், உயிர்ச்சேதங்களோ அல்லது காயங்களோ பதிவாகவில்லை. தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. […]