இலங்கை – இந்தியாவுக்கு இடையில்லான பொருளாதார உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எட்கா குறித்து கலாநிதி ஹர்ஷ டி சில்வா

இலங்கை தற்போதைய நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். எனவே இப்போதாவது இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (எட்கா) குறித்து தீவிரமாகப் பேச வேண்டும் என்றும் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு ஹர்ஷ இவ்வாறு […]
அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பைக் கருதியே அருச்சுனாவின் காணிக்குச் சிவப்பு எச்சரிக்கை ஒட்டவில்லை – மானிப்பாய் தவிசாளர்

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவின் காணிக்குச் சிவப்பு எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டச் சென்றால் “வெடி விழும்” என அவர் மிரட்டியதால், அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பைக் கருதி நோட்டீஸ் ஒட்டவில்லை என மானிப்பாய் பிரதேச சபைத் தவிசாளர் க.ஜெசீதன் தெரிவித்த கருத்தால் சபையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன. மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வின் போதே இந்த விவகாரம் சூடுபிடித்தது. பெரியவிளான் பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவிற்குச் சொந்தமான காணி பற்றைகள் வளர்ந்து காடாகக் காணப்படுவதால், […]
மத்தல சர்வதேச விமான நிலையத்தை கல்ஃப் சேவைகள் நிராகரிப்பு?

கல்ஃப் விமான சேவைகள் மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று சிவில் விமானப் போக்குவரத்து பிரதியமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு தெரிவித்தார். சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை கல்ஃப் விமான நிறுவனங்களுக்கு மத்தல விமான நிலையத்தை பயன்படுத்துமாறு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் நாங்கள் அவர்களுக்கு இந்த விமான நிலையத்தை பயன்படுத்துமாறு தெரிவித்துள்ளோம். ஆனால் இதுவரை யாரும் […]
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் போரை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய பத்திரிகையாளர் வான்வழித் தாக்குதலில் பலி!

லெபனான் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் போரை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய துணிச்சலான பத்திரிகையாளர் பாத்திமா ப்தூனி இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் (மார்ச் 28) வீரமரணம் அடைந்தார். அல்-மனாரின் அலி ஷேப் உட்பட சக செய்தியாளர்களுடன் பயணித்த போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. ”PRESS” (பத்திரிகை) என்று தெளிவாகக் குறிக்கப்பட்ட வாகனத்தில் இருந்தபோதே அவர் நேரடியாகக் குறிவைக்கப்பட்டுள்ளார். பாத்திமா வெறும் செய்தியாளர் மட்டுமல்ல; அநீதிக்கு எதிரான ஒரு போராட்டக் குரல். தனது மக்களின் வலிகளையும், எதிர்ப்பின் செய்தியையும் […]
ஏப்ரலில் டிஜிட்டல் பயணச்சீட்டு முறை அறிமுகம்!

இலங்கை புகைரதத் துறையில் பாரம்பரிய காகித டிக்கெட் முறையை மாற்றும் நோக்கில், ஸ்மார்ட் பயணச்சீட்டு (Smart Ticketing) முன்முயற்சி திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. CSRP (Corporate Strategic Reform Programme) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த புதிய டிஜிட்டல் பயணச்சீட்டு முறை, நாடு முழுவதும் பயணிகள் சேவையை நவீனமயப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த முன்முயற்சி திட்டம் முதற்கட்டமாக களனிவெளி ரயில் மார்க்கத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, நாரஹென்பிட்டி, நுகேகொடை, மாகும்புர, ஹோமாகம, பதுக்கை […]
வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு குறித்து கடற்தொழில் அமைச்சர் கடும் எச்சரிக்கை

வடக்கில் உள்ள மணல் மாஃபியாக்களின் பின்னல் சில அரசியல்வாதிகள் , சில பொலிஸார் உள்ளனர் என்பது எமக்கு தெரியும். இவர்கள் கடந்த கால ஆட்சியாளர்களுக்கு விளையாட்டு காட்டியது போல தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் காட்டலாம் என நினைக்க வேண்டும். அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (28) […]
கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த தந்தை, மகன் கைது!
போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 29ஆம் திகதி கணேமுல்ல பொலிஸ் பிரிவில் 04 கிலோகிராம் 423 கிராம் கொக்கெய்ன் மற்றும் 3,450 போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். இக்கடத்தலுக்கு குறித்த பெண்ணின் கணவர் மற்றும் மகன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்தது. சந்தேகநபர்கள் இருவரும் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த நிலையில், கடந்த 24ஆம் திகதி […]
இருவேறு பகுதிகளில் விபத்து: சிறுவன் உட்பட மூவர் பலி!

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகனவிபத்துக்களில் சிறுவன் ஒருவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை – புல்மோட்டை வீதியில், நேற்று சனிக்கிழமை (28) மதியம் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். திருகோணமலையிலிருந்து குச்சவெளி நோக்கி பயணித்த கேப் ரக வாகனமொன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் அதில் […]
ஹட்டனில் பாடசாலை மாணவன் மீது வகுப்பறைக்குள் தாக்குதல்: மூவர் கைது!

ஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் வகுப்பறைக்குள் மாணவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் என மூன்று பேர் ஹட்டன் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் இரு மாணவர் குழுக்களுக்கிடையே கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரும் தொடர்புபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் இந்த விவகாரம் பாடசாலை […]
வடமராட்சி கிழக்கில் மக்களின் காணிகள் தேசிய பூங்காவை ஆதரித்தது சுமந்திரன் தான் – முரளிதரன் குற்றச்சாட்டு

வடமராட்சி கிழக்கில் கட்டைக்காடு,கேவில்,சுண்டிக்குளம் வரையான மக்களின் காணிகள் தேசிய பூங்காவென பிரகடனப்படுத்தியமைக்கு தமிழரசுக் கட்சி எதிர்ப்பு தெரிவிக்காமல் அன்றைய காலப்பகுதியில் அதனை ஆதரித்தது தான் பிழை என சமூக செயற்பாட்டாளர் முரளிதரன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மக்களின் காணிகளை தேசிய பூங்காவென கூறி வடமராட்சி கிழக்கில் வனஜீவராசி திணைக்களம் கையகப்படுத்தி வைத்துள்ளார்கள்.இதனால் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இந்தப் பகுதி தேசிய பூங்காவென உறுதிப்படுத்துவதற்காக அவ்வப்போது யானைகளை கொண்டுவந்து விட்டு மக்களை […]