வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு குறித்து கடற்தொழில் அமைச்சர் கடும் எச்சரிக்கை

வடக்கில் உள்ள மணல் மாஃபியாக்களின் பின்னல் சில அரசியல்வாதிகள் , சில பொலிஸார் உள்ளனர் என்பது எமக்கு தெரியும். இவர்கள் கடந்த கால ஆட்சியாளர்களுக்கு விளையாட்டு காட்டியது போல தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் காட்டலாம் என நினைக்க வேண்டும். அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (28) இரவு இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

மணல் கொள்ளையர்களிடம் இருந்து எமது வளங்களை பாதுகாக்க வேண்டும். அண்மைய நாட்களில் மணல் கொள்ளையர்களினால் 06 உயிர்கள் காவு வாங்கப்பட்டுள்ளது. இன்று ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தரின் உயிரை கூட காவு வாங்கியுள்ளனர்.

இது ஆட்டை கடிச்சு , மாட்டை கடிச்ச கதையாக பொலிஸ் உத்தியோகஸ்தரின் உயிரை பறிக்கும் அளவுக்கு சென்றுள்ளனர். இவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மணல் விநியோகத்தை ஒழுங்கு படுத்தி அனுமதி பத்திரங்கள் வழங்குவதன் ஊடாக ஒரு கியூப் மண் 7500 ரூபாய்க்கு வழங்க முடியும். அதனால் ஒரு டிப்பர் மண் 23 ஆயிரத்திற்கு பெற முடியும். யாழ்ப்பாணத்திற்கு அதனை கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவுகள் உள்ளிட்ட செலவுகளை கணித்தால் , சுமார் 55 ஆயிரம் தொடக்கம் 65 ஆயிரத்திற்கும் மண்ணை விநியோகிக்க முடியும்.

சட்டவிரோதமாக மணலை விற்பனை செய்யும் மணல் மாஃபியாக்கள் ஒரு டிப்பர் மண்ணை ஒரு இலட்சத்து 20ஆயிரம் ரூபாய் வரைக்கும் யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்கின்றனர்.

அவ்வாறான மண் மாஃபியாக்களின் பின்னால் சில அரசியல்வாதிகள் சில பொலிஸார் உள்ளனர் என்பதும் எமக்கும் தெரியும் கடந்த கால அரசாங்கங்களுக்கு விளையாட்டு காட்டியது போல தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் விளையாட்டு கட்டலாம் என நினைக்க வேண்டாம் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம்.

சட்டவிரோத மணலுடன் முதல் தடவை கைப்பற்றப்படும் வாகனத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரையில் தண்டம் அறவிடப்படும். இரண்டாவது தடவையும் அதே தவறை செய்தால் 20 இலட்ச ரூபாய் வரையில் தண்டம் அறவிடப்படும். மூன்றாவது தடவையும் அதே தவறை செய்தால் வாகனம் அரசுடைமையாக்கப்படும். இது தொடர்பான சட்டங்கள் மிக கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். இது தொடர்பில் நீதி அமைச்சு உள்ளிட்ட தரப்புகளுடன் பேச்சுக்கள் நடாத்தியுள்ளோம்.

அத்துடன் பொலிசாரின் நடவடிக்கைகள் சாதாரண மக்களை வஞ்சிக்கும் நடவடிக்கையாக இருக்காது , மாஃபியாக்கள் மீதான கடுமையான நடவடிக்கையாக இருக்க வேண்டும் என பொலிஸாருக்கும் அறிவுறுத்தியுள்ளோம்.

மாஃபியாக்களுக்கு மக்கள் பயப்படுகின்றார்கள். அவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்க பயப்படுகிறார்கள். அதனால் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் அறிவிக்க மிக விரைவில் தொலைபேசி இலக்கங்களை அறிவிப்போம். அதனூடாக அவர்கள் தகவல்களை தெரியப்படுத்த முடியும்.

இவ்வாறான செயற்பாடுகளை தனியே பொலிஸாரோ , அரசாங்கமோ கட்டுப்படுத்த முடியாது. பொது மக்களின் பங்களிப்பு கட்டாயம் தேவை என மேலும் தெரிவித்தார்.

imf bb

இலங்கைக்கு ? தனது ஆதரவு எந்த வடிவத்திலும் தொடரும் என்கின்றது சர்வதேச நாணயநிதியம்

October 15, 2026

இலங்கை தற்போது முன்னெடுத்துள்ள சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவுடனான திட்டம் 2027 இல் முடிவடைந்த பின்னரும்; இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க தயாராகயிருப்பதாக

anura may 26

சவுதி அரேபியாவிற்கு நன்றி தெரிவித்தார் அனுரா- அனோஜனுக்கு தொடர்ந்தும் உதவி

October 15, 2026

அனோஜன் சிவராஜாவிற்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை சவுதிஅரேபிய நீதிமன்றம் இரத்து செய்துள்ளதை வரவேற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க அனோஜனுக்கும் அனோஜனின் குடும்பத்தவர்கள் மற்றும்

Dayan-Jayatilleka

மாகாணசபைதேர்தல்கள் குறித்து அரசாங்கத்திற்கு அக்கறையில்லை – அரசாங்கம் தேர்தலை நடத்தாது- தயான் ஜயதிலக

October 15, 2026

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாகாணசபை தேர்தல்களை நடத்த விரும்பவில்லை என முன்னாள் இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான தயான் ஜயதில

a

அனோஜன் குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு

October 15, 2026

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருந்த கல்முனை – நற்பிட்டிமுனையைச்

456

இன்று கொழும்பு வருகிறது பௌத்த தேரர்களின் நடைபயணப் பேரணி

October 15, 2026

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பமான ‘காவி உடைக்கு நீதி –

MediaFile_20261015_014131_330

நடைபயண பேரணியில் தாக்குதல் என்ற சமூக வலைத்தள காணொளி குறித்து பொலிஸார் விளக்கம்!

October 15, 2026

சிறை வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி இடம்பெறும் நடைபயண பேரணிக்கு ஆதரவளித்த ஒருவருக்குத் தாக்குதல்

arres

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

October 15, 2026

மனிதக் கொலையுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி

8

“மின்சாரப் பிரச்சனைக்கும், விலைவாசி உயர்வுக்கும் மத்திய அரசை கைக்காட்டுவதா?” – தவெக அரசுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

October 14, 2026

மதுரை: தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான மின்சாரப் பிரச்சினை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றுக்கு மத்திய அரசைக் குற்றம்

7

“எங்க உங்க அப்பாவையே காணோம் – அரசு பேருந்து பெயர் பலகையில் சர்ச்சை வாசகம்!”

October 14, 2026

கடலூர்: புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசுப் பேருந்தின் டிஜிட்டல் பெயர் பலகையில், ஆளுங்கட்சியான திமுகவினரைக்

6

“கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டம் விரைவில் நனவாகும்!” – முதலமைச்சர் விஜய்யிடம் சந்திரபாபு நாயுடு உறுதி!

October 14, 2026

விஜயவாடா: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு அரசு முறைப் பயணமாக இன்று சென்றுள்ளார். அங்கு அவர் ஆந்திர

5

“இடைத்தேர்தல் தோல்வி குறித்து அதிமுக தலைமை ஆலோசிக்க வேண்டும்!” – சி.வி.சண்முகம்!

October 14, 2026

சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட

4

“மற்ற கட்சிக்காரர்களை அழைத்து கட்சியில் இணைப்பது கேவலம்!” – தவெக மீது இபிஎஸ் தாக்கு!

October 14, 2026

சேலம்: தமிழக வெற்றிக் கழகத்தில் போதிய நிர்வாகிகள் இல்லாத காரணத்தால், மற்ற கட்சிக்காரர்களைக் கூவிக்கூவி அழைத்துக் கட்சியில் இணைப்பது மிகவும்