லெபனான் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் போரை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய துணிச்சலான பத்திரிகையாளர் பாத்திமா ப்தூனி இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் (மார்ச் 28) வீரமரணம் அடைந்தார்.
அல்-மனாரின் அலி ஷேப் உட்பட சக செய்தியாளர்களுடன் பயணித்த போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. ”PRESS” (பத்திரிகை) என்று தெளிவாகக் குறிக்கப்பட்ட வாகனத்தில் இருந்தபோதே அவர் நேரடியாகக் குறிவைக்கப்பட்டுள்ளார்.
பாத்திமா வெறும் செய்தியாளர் மட்டுமல்ல; அநீதிக்கு எதிரான ஒரு போராட்டக் குரல். தனது மக்களின் வலிகளையும், எதிர்ப்பின் செய்தியையும் உலகிற்கு கொண்டு சேர்க்கும் இடைவிடாத ஆர்வம் அவரிடம் இருந்தது என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.