இன்றைய வானிலை

சப்ரகமுவ மாகாணத்திலும் கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வரட்சியான மற்றும் வெப்பமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய […]

செங்கடல் போக்குவரத்திற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் ; அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் உலக பொருளாதாரத்திற்கு மேலும் பாதிப்பு ஏற்படலாம்!

ஈரானுடனான தங்களது தொடர்பு மற்றும் ஆதரவு இருந்தபோதிலும், ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்இந்தப் போரின் முதல் நான்கு வாரங்கள் வரை அமைதி காத்தனர். ஆனால் தற்போது, யேமனின் தலைநகர் சனா (Sanaa), நாட்டின் வடக்கு மற்றும் பிற பகுதிகளைத் தன்வசம் வைத்துள்ள அந்த இயக்கம், இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை வீசி தனது முதல் நகர்வை மேற்கொண்டுள்ளது. “முக்கியமான இஸ்ரேலிய இராணுவத் தளங்களையே” தாம் குறிவைத்ததாகஹெளத்திகள் கூறுகின்றனர். ஹெளத்திகள்  தங்களது ஏவுகணை வீச்சு மூலம் இஸ்ரேலுக்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தல், ஈரானுடன் ஒப்பிடுகையில் மிகக் […]

வட மாகாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள்

வட மாகாணத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் மற்றும் கனிம வள அகழ்வு, கடத்தல் போன்ற செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் தகவல்கள் வருமாறு: GPS கண்காணிப்பு: கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் (GPS) கருவி பொருத்தப்பட்டு, அவை முறையாகக் கண்காணிக்கப்படும் என்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் […]

மத்திய கிழக்கிலுள்ள இஸ்ரேலிய – அமெரிக்க பல்கலைக்கழகங்களை தாக்குவோம்

மத்திய கிழக்கிலுள்ள இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களை இலக்கு வைக்கப்போவதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் தெஹ்ரானில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, பிராந்தியத்திலுள்ள அத்தகைய அனைத்துப் பல்கலைக்கழகங்களும் சட்டபூர்வமான இலக்குகளாகக் கருதப்படும் என அவர்கள் அறிவித்துள்ளனர். மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் அனைத்துப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள் […]

ஆரம்பநிலை வைத்திய அதிகாரிகள் நியமனங்களுக்கு விண்ணப்பங் கோரல்!

ஆரம்பநிலை வைத்திய அதிகாரிகளுக்கான நியமனங்களுக்கு விண்ணப்பங்களைக் கோருவதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 04ஆம் திகதியுடன் தமது உள்ளகப் பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்த 453 மருத்துவப் பட்டதாரிகளுக்காக இந்த விண்ணப்பங்கள் கோரப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், குறித்த காலப்பகுதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமானது எனவும் […]

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள்; இலங்கை தமிழ் அரசுக் கட்சி – சங்கு கூட்டணி கலந்துரையாடல்

இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தில் அலுவலகத்தில் நேற்றைய தினம்(28) சனிக்கிழமை காலை குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. அதில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் இணைத் தலைவர்களான செல்வம் […]

நாடு தழுவிய ரீதியில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம்

சித்திரை புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நாடு தழுவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு காலத்தில் பொதுமக்களின் நடமாட்டம் மற்றும் போக்குவரத்துப் பயன்பாடு அதிகரிப்பதைக் கருத்திற்கொண்டு, இந்த விசேட பாதுகாப்புப் பணியில் மேலதிக போக்குவரத்துப் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் […]

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களுக்கு தென்கொரியாவில் சர்வதேச விருது!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தாய்மார்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையையும் நீதியையும் கோரி 3,250 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை ‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம்’ ARED முன்னெடுத்து வருகிறது. இந்தத் தொடர் போராட்டத்தின் முக்கியத்துவம், நியாயத்தன்மை மற்றும் உறுதிப்பாட்டை அங்கீகரிக்கும் வகையில், தென்கொரிய அமைப்பு ஒன்று 2026ஆம் ஆண்டிற்கான சர்வதேச விருதை வழங்க ARED(Association for Relatives of the […]

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா – அமைச்சர் நளிந்த விசேட சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இதன்போது, சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, வைத்தியசாலையினால் வழங்கப்படும் சேவைகளை, குறிப்பாக கண் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. வைத்தியசாலையின் வெளிநோயாளிப் பிரிவு, பல் மருத்துவப் பிரிவு மற்றும் ஆய்வகச் சேவைகள் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளின் செயற்பாடுகள் இதன்போது மதிப்பாய்வு செய்யப்பட்டது. அத்துடன், வைத்தியசாலையின் […]

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி

ஐரோப்பிய நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி, பலரிடம் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பணத்தை மோசடி செய்துவிட்டு, நபர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார். நீதிமன்றத்தில் முன்னிலையாமல் தலைமறைவாக இருக்கும் சந்தேகநபர் குறித்து தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சுதித் கசுன் மாரகே என்பவரே இவ்வாறு தேடப்பட்டு வரும் நபர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபருக்கு எதிராக கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவு, மொரட்டுவை மற்றும் ஏறாவூர் உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. […]