ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள் ‘இலங்கையின் ஒற்றுமைக்கு பாதிப்பானவை’ என இலங்கைச் சுங்கம் தடுப்பு!

தான் எழுதிய நூல்கள் கொழும்பில் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் தீபச்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.

நடுகல், பயங்கரவாதி, சயனைட், எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன் போன்ற நூல்கள் இந்தியாவில் இருந்து கப்பலில் பொதியாக வந்தவேளையில், ‘இலங்கையின் ஒற்றுமைக்கு பாதிப்பானவை’ என்று காரணம் கூறப்பட்டு இலங்கை சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டடுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்கும் பட்சத்திலேயே புத்தகங்கள் விடுவிக்கப்படும் என்று சுங்கப் பிரிவு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் எழுத்தாளர் தீபச்செல்வன் கருத்து தெரிவிக்கையில்,

ஒருபுறம், எமது இனத்தின் வாழ்நிலை மிகவும் நெருக்கடியும் போராட்டமும் கொண்டது எனில், மறுபுறம் அதனை எழுதுவதும் புத்தகமாக அவை பரிமாறப்படுவதும் கூட போராட்டமாகியதை உணர்கையில் மிகுந்த வேதனையும் அயர்ச்சியும் அடைந்தேன். ஈழ மண்ணில் ஒரு எழுத்தாளனாக வாழ்வது என்பது மிகவும் நெருக்கடியானது என்பதை மீளவும் மீளவும் எதிர்கொள்கிறேன் என்றார்.

இந்த நிலையில் தீபச்செல்வனின் நூல்களை உடன் விடுவிக்க வேண்டும் என்று சிங்கள எழுத்தாளர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக குரல் கொடுத்து வருகின்றனர்.

இதனையடுத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி விரைந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தீபச்செல்வனைத் தொடர்புகொண்டு அறிவித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனும் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.

இதன்போது, எழுத்தாளர் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் எழுதிய கடிதம்,

“நான் ஒரு எழுத்தாளன். கிளிநொச்சியில் வசித்து வருகிறேன். போர்ச் சூழலில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று பல்கலைக்கழகம் சென்று தற்போது ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். போரால் எங்கள் வாழ்வும் காலமும் அழிக்கப்பட்டது.

போரில் எனது சகோதரன் ஒருவர் வீரராக சாவடைந்தார். கடந்த கால அனுபவங்கள், நினைவுகளை எதிர்காலத்திற்கான பாடமாக அமைய வேண்டும் என்பதற்காக நாவல்களாகவும் கவிதைகளாகவும் எழுதி வருகிறேன்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து அனுப்பட்ட எனது புத்தகங்கள் 360 சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பதாக காரணம் கூறப்பட்டுள்ளது. இவை நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக ஒருபோதும் எழுதப்பட்டவையல்ல. அத்துடன் எந்தவொரு அமைப்பையும் மீளமைக்கும் விதத்தில், நான் புத்தகங்களை எழுதவில்லை.

கடந்த போர்க்காலத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள், குழந்தைகள் மற்றும் முன்னாள் போராளிகள் பற்றிய கதைகளையே எனது நாவல்களில் எழுதியுள்ளேன். அவற்றை வெளிக்கொணர்ந்து போரால் பாதிக்கப்பட்ட சமூகத்தை வளப்படுத்துவதற்கு ஒரு படைப்பாளியாக என்னாலான எளிய பங்களிப்பை எழுத்தில் வழங்குகிறேன்.

கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கில் தமிழ் மக்கள், படைப்பாளிகள் மாத்திரமின்றி புத்தகங்களும் தண்டனைக்கும் விசாரணைக்கும் உள்ளாகின. ஆனால் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவின் ஆட்சியில் நாம் முழுமையான சுதந்திரத்துடன் வாழவும் எழுவும் முடியும் என்ற நம்பிக்கையை இன்னுமும் பற்றிக் கொண்டுள்ளோம்.

எனது எழுத்துக்கள் மிகுந்த நியாயம் கொண்டவை என்பதால் சிங்கள மக்கள் மத்தியிலும் எனக்கு நிறைய வாசகர்கள் உள்ளனர். இப்போது தடுத்து வைக்கப்பட்ட எனது நூல்களில் சில சிங்களத்திலும் வெளியாகி உள்ளன.

அவற்றைப் படித்த சிங்கள மக்கள் எனது வீடு தேடி வந்துள்ளனர். எழுத்தில் வழியாக இரண்டு இனங்களுக்கும் இடையில் பரஸ்பர உணர்வுப் பரிமாற்றத்தை ஏற்படுத்தி நல்ல புரிதலை ஏற்படுத்துவதே எனது நோக்கமாகும்.

கவிதை, எழுத்து, கலைகள்மீது மிகுந்த ஈடுபாடும் மதிப்பும் கொண்டுள்ள தாங்கள், நல்லெண்ணம் கொண்டு செயற்படும் எனது நூல்களை, விடுவிக்க ஆவணை செய்யுமாறு தங்களை பணிவுடன் வேண்டுகிறேன்.” என்றும் அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

d

ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறப்பு – டொனால்ட் ட்ரம்ப்

April 17, 2026

ஈரான் கடற்பரப்பில் அமைந்துள்ள சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தற்போது முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும்,

po

பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள லாங்லியில் கத்திக்குத்து: ஒருவர் காயம்

April 17, 2026

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள லாங்லி (Langley), வில்லோபி (Willoughby) பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் நடந்த “திட்டமிட்ட” (Targeted)

hf

மேற்கு ஆசியப் போரினால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை: ஐ.நா

April 17, 2026

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் நெருக்கடியின் நேரடி மற்றும் மறைமுகத் தாக்கங்களால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில்

ku

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி; குமார ஜெயக்கொடிக்கு ஆதரவாக அமைச்சர்கள் தற்காப்பு வாதம்

April 17, 2026

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி தொடர்பான எந்தவொரு ஊழல் விசாரணைகளிலும் முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்குத் தொடர்பிருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை

cacv

கனடாவில் பல பெண்களைத் திருமணம் செய்துகொண்ட நபர் குறித்து பொலிஸார் விசாரணை

April 17, 2026

முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரும், MMA தற்காப்புக் கலை வீரருமான ஜேசன் வாஷிங்டன் (Jason Washington) என்பவர், தனது முந்தைய

5

இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவு

April 17, 2026

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான தூதுக்குழுவினர், 2026 வசந்தகாலக் கூட்டத்தின் (Spring Meetings) போது

litr

மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும் – லிட்ரோ

April 17, 2026

இலங்கையில் எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும்

ve

தவிசாளர் வேலு யோகராஜின் பிணை மனு நிராகரிப்பு

April 17, 2026

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜின் பிணை கோரிக்கையை

Gamini

கத்தோலிக்க திருச்சபையினர் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் குறித்து திருப்தி!

April 17, 2026

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்ட வருவதாக கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ

iran

கைதான இந்திய கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்

April 17, 2026

கிளிநொச்சி – இரணைதீவு கடற்பரப்பிற்குள் கடந்த 9ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கைதான

srines

இனப்பிரச்சினைக்கு பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது!

April 17, 2026

பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று இவர்கள் நினைக்கின்றார்கள், அப்படியல்ல. நிச்சயமாகப் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்படுமாக இருந்தால்

kap

ஸ்ரீலங்கன் முன்னாள் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரின் பிணை மனு நிராகரிப்பு

April 17, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த