நெடுந்தீவிற்கான கடற்போக்குவரத்தில் பழுதடைந்த நெடுந்தாரகை இன்று (29.03.2026) முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் நேற்றுமுன்தினம் (27.03.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்று (28) நெடுந்தாரகையை நேரடியாக பார்வையிட்டு தற்காலிக திருத்த நடவடிக்கையை வடபிராந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் புடிக்ஹ லியனகமகே மேற்கொண்டுள்ளார்.
நெடுந்தாரகை சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம் | Long Distance Service Resumes From Today
அதன்பிறகு, இன்று (29) முதல் நெடுந்தாரகை சேவையில் மீண்டும் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நெடுந்தாரகையை நிரந்தரமாக திருத்துவதற்கான நடவடிக்கைகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.