ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்டேன் (LANTERN – Land and Trust-Building Engagement) செயற்றிட்டம் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வரப்பிரசாதம்-ஆளுநர் நா.வேதநாயகன்

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்டேன் (LANTERN – Land and Trust-Building Engagement) செயற்றிட்டம் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வரப்பிரசாதம் எனவும் இந்தத் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாகக் காணப்படும் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான ‘லன்டேன்’ செயற்றிட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இ சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது.
இந்தச் செயற்றிட்டமானது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம், சர்வதேச குடிவரவு அமைப்பு மற்றும் விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றின் கூட்டுப் பங்கேற்புடன் முன்னெடுக்கப்படவுள்ளது.
சுமார் 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியீட்டத்தில், 24 மாத காலப்பகுதிக்கு இந்தச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 1,000 ஏக்கர் காணிகளை அரசினால் விடுவிப்பதற்கும், 1,000 நபர்களுக்கு முறையான காணி உறுதிச் சான்றிதழ்களை வழங்குவதற்கும் இலக்கு முதலில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக சுமார் 1,500 குடும்பங்கள் நேரடியாகவும், 200,000 பேர் வரை மறைமுகமாகவும் பயனடையவுள்ளனர்.
காணி முரண்பாடுகளைத் தீர்ப்பதன் மூலம் அரசிற்கும் சமூகங்களுக்கும் இடையிலான நம்பிக்கையை வலுப்படுத்துதல், காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு ஆகியவற்றைத் துரிதப்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், ‘வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் காணிப் பிரச்சினையே பிரதான பிரச்சினையாகக் காணப்படுகின்றது. போர் காரணமாகப் பொதுமக்களும் அரச திணைக்களங்களும் காணி தொடர்பான ஆவணங்களை முழுமையாக இழந்துள்ளமையால், இந்தப் பிரச்சினை தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. இவ்வாறானதொரு நிலையில், இந்தச் செயற்றிட்டமானது எமது மாகாணத்துக்கு மிகவும் அவசியமானதாகும். இதனைத் துரிதமாக முன்னெடுக்க வேண்டும். எமது மாகாணத்தில் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்கள் முன்னோடித் திட்டத்துக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தையும் இந்த முன்னோடித் திட்டத்தில் உள்வாங்க முடியுமாக இருந்தால் அது மிகவும் சிறப்பாக அமையும். மேலும், காணித் திணைக்கள உத்தியோகத்தர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு, அத்திணைக்களம் வலுப்படுத்தப்படுவது எதிர்காலத்தில் எமது மாகாணத்துக்குப் பெரும் பயனை அளிக்கும்,’ எனத் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலின்போது, இந்தத் திட்டத்தை எவ்வாறு வினைத்திறனாக முன்கொண்டு செல்வது மற்றும் நடைமுறைச் சிக்கல்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் அமைச்சின் பிரதிநிதிகளுக்கும், ஐ.நா. முகவர் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விரிவான ஆராய்வுகள் இடம்பெற்றன.
இந்த விசேட கூட்டத்தில் மத்திய காணித் திணைக்கள அதிகாரிகள், மத்திய விவசாய அமைச்சின் அதிகாரிகள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மாவட்டச் செயலாளர்கள், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்
ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்