வடக்கு, கிழக்கு சிகையலங்கார நிலைய சம்மேளனங்களை இணைப்பது குறித்து ஆய்வு

வடக்கு – கிழக்கு மாகாணத்தில் உள்ள அழகக சம்மேளனங்களை இணைத்து ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என வடக்கு மாகாண அழகக கூட்டுறவு சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் ஆனந்தராசா உதயசங்கர் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (17) யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள அழகக சம்மேளனங்களை இணைப்பது குறித்து கடந்த காலங்களில் ஆய்வு செய்யப்பட்டு பின்னர் அது கைவிடப்பட்டது. அதனை இணைப்பதன் தேவையை தற்போது உணர்கிறோம். ஆகையால் அது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் கட்சி சார்ந்த ஒருவர் சிகையலங்கார நிலையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்க கூடாது. வேறு ஒரு தினத்தில் விடுமுறையை வழங்க முடியாதா? ஏனையோரும் குறித்த தொழிலை பழகி செய்தல் வேண்டும்.

சிகையலங்கார தொழிலை யாரும் பழகி, முறைப்படி அனுமதி பெற்று செய்யலாம். அதனை நாங்கள் கடந்தகாலம் தொட்டு கூறி வருகிறோம். நாங்கள் அதற்கு எதிர்ப்பானவர்கள் அல்ல.

ஞாயிற்றுக்கிழமை என்பது பொதுவான ஒரு விடுமுறை தினம். ஆகையால் சிகையலங்காரம் செய்பவர்களுக்கும் ஒரு ஓய்வு தேவை என்பதால் அந்த விடுமுறையை எமது அமைப்பு நடைமுறைப்படுத்துகிறது. அது எதிர்காலத்திலும் நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனாவுக்கு பின்னர் கடந்த 2025 ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர்தான் கட்டணமானது எமது தொழிற் சங்கத்தால் அதிகரிக்கப்பட்டது. கடந்த காலங்களில் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கட்டணங்களை புதுப்பித்து நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

கடந்த காலங்களில் கட்டணம் அதிகரித்தமை தொடர்பாக உள்ளூராட்சி சபைகள், ஆளுநர் செயலகம், மாவட்ட செயலகம் ஆகியன கடுமையான நெருக்கடிகளை கொடுத்தன. நடைமுறை செலவுகளுக்கு அமைவாகவே நாங்கள் குறித்த காலப்பகுதிக்கு ஒருமுறை கட்டண அதிகரிப்பு செய்து வருகிறோம்.

மாணவர்களது சிகையலங்காரம் குறித்து நாங்கள் அதிக கரிசினை செலுத்தி வருகிறோம். குறித்த விடயத்தால் எமது தொழிலாளர்களும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.

எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு சிகை அலங்காரம் செய்கின்ற பொழுது பாடசாலைகள் சில விடயங்களை செய்யலாம் என்பது தொடர்பாக நமது முன்மொழிவை முன்வைக்கின்றோம்.

மாணவர்களுக்கு ஒரு அட்டையினை வழங்குவதன் மூலம், அந்த அட்டையில் சிகையலங்காரம் செய்கின்ற இடங்களை பதிவு செய்ய கோரி, மாணவர்கள் எங்கே சிகை அலங்காரம் செய்கின்றார்கள் என்பதனை கணித்துக் கொள்ளலாம்.

அதுபோல எதிர்காலத்தில் மாணவர்களுக்கு எவ்வாறு சிகை அலங்காரம் செய்ய வேண்டும் என்ற ஒரு மாதிரி படத்தை முன்மொழிந்து, அதற்கு அமைவாக சிகை அலங்காரம் செய்பவர்களுக்கு கட்டணத்தை குறைப்பதற்கு நாங்கள் தீர்மானித்து இருக்கின்றோம்.

அந்த வகையில் குறித்த முன்மொழிவுக்கு அமைவாக சிகில அலங்காரம் செய்பவர்களுக்கு வடக்கு மாகாணம் முழுவதும் 350 அளவிடப்படும் என தீர்மானித்திருக்கின்றோம்.

சிகையலங்காரத்தில் ஈடுபடுகின்றவர்களை சமூக ரீதியாக பாகுபாடு காட்டி, அவர்களது மனங்களை புண்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்தால் அவற்றுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டி ஏற்படும் என்றார்.

iran

ஈரானிய துறைமுகங்கள் அமெரிக்காவால் முற்றுகை!

April 18, 2026

ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் கப்பல்களுக்கு எதிரான தனது அறிவிக்கப்பட்ட கடல் முற்றுகையை அமெரிக்கா

tour

இலங்கையின் சுற்றுலாத்துறைக்குப் பாரிய வீழ்ச்சி

April 18, 2026

இலங்கையின் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்படும் வெளிநாட்டு செலாவணி வருவாய், 2026 மார்ச் மாதத்தில் 223.7 மில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைந்துள்ளது.

Parliament

இலங்கை நாடாளுமன்ற முறைகேடுகள்: சர்வதேச அமைப்புகளிடம் முன்னாள் எம்.பி.க்கள் முறைப்பாடு

April 18, 2026

நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் நிர்வாக முறைகேடுகள், பழிவாங்கல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான நான்கு பிரதான விடயங்களை முன்வைத்து, முன்னாள்

photo-collage.png (12)

கனடாவில் கல்முனை பிராந்திய மக்களின் மரநடுகை விழா

April 18, 2026

இன்றைய தினம்(18) கனடா மிசிஸாக்காவில் கல்முனை பிராந்திய மக்களின் மரநடுகை விழா கனேடிய நேரம் காலை 10 மணி தொடக்கம்

net

நெத்தலியாறு விவசாயிகள் ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை

April 18, 2026

தமது சொந்தக் காணிகளிலேயே சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதியைப் பெற்றுத்தருமாறு கல்மடுக்குளத்தின் சிறுபோக நீர்ப்பாசன பங்காளர்களான விசுவமடு மேற்கு கமக்கார

ds

வடக்கு, கிழக்கு சிகையலங்கார நிலைய சம்மேளனங்களை இணைப்பது குறித்து ஆய்வு

April 18, 2026

வடக்கு – கிழக்கு மாகாணத்தில் உள்ள அழகக சம்மேளனங்களை இணைத்து ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்

ind

இலங்கை விஜயத்தின் போது இந்திய துணை குடியரசு தலைவர் இந்திய வம்சாவளி தமிழர்களை நோக்கி நேசக்கரம் நீட்டுவார்- இந்திய தூதுவர்

April 18, 2026

பரந்த அளவிலான இராஜதந்திர மற்றும் மக்கள் நலன் சார்ந்த பயணமாக, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள்

chaco

நிலக்கரி முறைகேடு; அடுத்த வாரம் விசாரணை ஆரம்பம்

April 18, 2026

இலங்கையில் நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தி நடவடிக்கைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்

cana gu

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற துப்பாக்கிச் சூடு: ஆறாம் ஆண்டு நினைவேந்தல்!

April 18, 2026

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற பகுதியில், பொலிஸ் அதிகாரி வேடமணிந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளைஞர்

her

லெபனானில் பிரெஞ்சு அமைதிப்படை சிப்பாய் பலி: ஹிஸ்புல்லா மீது மக்ரோன் குற்றச்சாட்டு

April 18, 2026

தெற்கு லெபனானில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில், சர்வதேச அமைதிப்படைப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர்

sea

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க கடலில் குதித்த நபர் உயிரிழப்பு

April 18, 2026

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், பொலிஸாரிடம் சிக்காமல் இருக்க கடலில் குதித்த நிலையில், நீரில்

Parl

இலங்கை அமைச்சரவையில் மாற்றங்கள்?

April 18, 2026

நிலக்கரி கொள்முதல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குமார ஜெயக்கொடி பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்த வெற்றிடத்திற்குத் துறைமுகங்கள் மற்றும் விமான