கனடா – பிரம்டனில் வாகனவிபத்து!

கனடா – பிரம்டனில் வெள்ளிக்கிழமை (17) இரவு 9.30 மணியளவில் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. பிரம்டன் மேபீல்ட் அன்ட் ஷிங்கூசி (Mayfied and Chinguacoucy) பகுதியில் இடம்பெற்ற  விபத்து குறித்த விசாரணைகள் தற்போது பிரம்டன் பிராந்திய காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காவல்துறையின் விசாரணைகளுக்குப் பின்னரே சேத விபரங்கள் குறித்த மேலதிக விபரங்களை வழங்கக்கூடியதாகவிருக்கும் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெரோயின் கடத்தல்: மீன்பிடிப் படகின் உரிமையாளரும் கைது

சுமார் 150 கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்தி வந்த விவகாரத்தில், ‘தெனுவன் புதா’ என்ற பலநாள் மீன்பிடிப் படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (17) காலை டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட இந்தப் படகிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி 400 கோடி ரூபாவிற்கும் அதிகமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். முன்னதாக, கடந்த 13ஆம் திகதி நடுக்கடலில் வைத்து படகோட்டி உட்பட நான்கு மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். […]

வர்த்தக நிலையமொன்றினுள் பெண்ணின் தலைமுடியை வெட்டி சித்திரவதை: ஐவர் கைது

ராகமை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றினுள் வைத்து பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி, அவரைத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஐவர் ராகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் பரவிய காணொளி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த ராகமை பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றதன் பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைகளுக்காக ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம், ராகமை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பிரதான பெண் […]

தெல்லிப்பழை பொலிஸார் போதைப்பொருள் பாவித்தார்களா என முதலில் சோதியுங்கள்; பொண்ணொருவர் பகிரங்கக் குற்றச்சாட்டு

தனது மகனை தெல்லிப்பழை பொலிஸார் அவமானப்படுத்தியதாக தாயாரொருவர் குற்றம் சுமத்தியுள்ளார். அத்தோடு, தெல்லிப்பழை பொலிஸார் போதைப்பொருள் பாவிப்பது இல்லை என்றால் மருத்துவ பரிசோதனைக்கு வருமாறு தாயொருவர் பகிரங்க சவால் விடுத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் இளைஞனின் தாய் கருத்து தெரிவிக்கையில், எனது மகன் வேலைக்கு சென்றார். இதன்போது தெல்லிப்பழை பொலிஸார் அவரை மறித்து , கஞ்சா பாவித்துள்ளதாக கூறி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதன்பின்னர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனைக்கு […]

கச்சா எண்ணெய் விலை பாரியளவில் சரிவு!

சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 10 சதவீதத்திற்கும் அதிகமான பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஜூன் மாத விநியோகத்திற்கான பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 10.42 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து, ஒரு பீப்பாய் 89.03 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது. அதேவேளை, மே மாத விநியோகத்திற்கான வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெயின் விலை 11.11 […]

குற்றவாளி ‘கரன்தெனிய ராஜு’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

இந்தியாவில் வைத்து அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘கரன்தெனிய ராஜு’ என்பவர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவினரால் நேற்றிரவு (17) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். கொலைச் சம்பவங்கள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையிலேயே, இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர், பாதாள உலகக் குழுத் தலைவரான ‘கரன்தெனிய சுத்தாவின்’ சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கட்டைக்காட்டு பகுதியில் வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டவர் கைது

யாழ்ப்பாணம்- வடமராட்சி, கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நான்கு வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(17.4.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைகாட்டு பகுதியில் நபர் ஒருவரால் கடந்த 15 ஆம் திகதியன்று நான்கு வீடுகள் மீது சரமாரியான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன. வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் வீட்டின் உடமைகள் கண்ணாடி, தளபாடங்களை அடித்து சேதப்படுத்தி இருந்தார். குறித்த நபர் […]

இராணுவ புலனாய்வுப் பிரிவும் ஈஸ்டர் குண்டு தாக்குதல் திட்டத்தில் கூட்டுச் சதி?

ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடத்தப்படவிருந்த காலப்பகுதியில் சஹ்ரான் இந்தியாவுக்கு சென்று விட்டதாக இராணுவ புலனாய்வு பிரிவு அறிவித்ததாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த நாடாளுமன்ற தேர்வுக் குழுவில் தெரிவித்துள்ளார். இதனை கொழும்பில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் நடத்திய மாநாட்டில் உரையாற்றும் போதே ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். அங்கு அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடந்து 24 […]

எரிபொருள் விலை அதிகரிப்பு; அமைச்சர் வெளியிட்ட தகவல்

மத்திய கிழக்கின் போர்ச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் நிலவும் பெற்றோலியப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு அமைய எதிர்காலத்தில் ஓரளவுக்கு மீண்டும் எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிடும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார் எவ்வாறாயினும் எரிபொருள் விலையை அதிகரிக்கும் போது அதன் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை திறைசேரியும் (Treasury) பொற்றோலியக் கூட்டுத்தாபனமும் பொறுப்பேற்றுக்கொள்ளும் என நேற்று முன்தினம் (16.04.2026) களுத்துறை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனை […]