இலங்கை நாடாளுமன்ற முறைகேடுகள்: சர்வதேச அமைப்புகளிடம் முன்னாள் எம்.பி.க்கள் முறைப்பாடு

நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் நிர்வாக முறைகேடுகள், பழிவாங்கல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான நான்கு பிரதான விடயங்களை முன்வைத்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சங்கம் சர்வதேச மட்டத்தில் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளது.

இந்த முறைப்பாடுகள் பின்வரும் மூன்று சர்வதேச அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன:

சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் (Inter-Parliamentary Union)

பொதுநலவாய நாடாளுமன்ற சங்கம் (Commonwealth Parliamentary Association)

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் (UN High Commissioner for Human Rights)

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேමசிறி மானகே அவர்களின் கையொப்பத்துடன் இந்த அமைப்புகளுக்குத் தனித்தனியாகக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 4 முக்கிய விடயங்கள்:
ஓய்வூதியம் இரத்து: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை சட்டவிரோதமாகவும், தார்மீக ரீதியாகவும் பிழையான முறையில் இரத்து செய்தமை.

பிரதி பொதுச்செயலாளர் இடைநிறுத்தம்: நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளரின் கடமைகளை எவ்வித சட்டபூர்வ அதிகாரமும் இன்றி, உள்நோக்கத்துடன் இடைநிறுத்தியமை.

விசாரணை அறிக்கை புறக்கணிப்பு: நாடாளுமன்றத் தகவல் தொகுதி மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தின் பெண் அதிகாரி ஒருவருக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்கள் குறித்து முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி ஒருவர் வழங்கிய விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தத் தவறியமை.

நிர்வாகப் பாகுபாடு: முறையான நிர்வாகப் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் மற்றுமொரு பெண் அதிகாரி நாடாளுமன்றச் சேவையிலிருந்து விலகியமை.

ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்:
நாடாளுமன்றப் பணியாளர் ஆலோசனைக் குழுவிற்கு இவ்வாறான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கான சட்டபூர்வ அதிகாரம் இல்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள இச்சங்கம், இச்செயற்பாடுகள் இலங்கையின் நாடாளுமன்ற ஜனநாயகம், நிர்வாக நீதி மற்றும் நிறுவன ரீதியான சுதந்திரத்தைப் பாரதூரமாகப் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்குள் பாதுகாப்பான மற்றும் தொழில்முறை சார்ந்த சூழலை உறுதிப்படுத்தத் தவறியுள்ள இந்த நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து, நல்லாட்சியை நிலைநாட்ட உடனடியாகத் தலையிடுமாறு முன்னாள் எம்.பி.க்கள் சங்கம் அந்த சர்வதேச அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

iran

ஈரானிய துறைமுகங்கள் அமெரிக்காவால் முற்றுகை!

April 18, 2026

ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் கப்பல்களுக்கு எதிரான தனது அறிவிக்கப்பட்ட கடல் முற்றுகையை அமெரிக்கா

tour

இலங்கையின் சுற்றுலாத்துறைக்குப் பாரிய வீழ்ச்சி

April 18, 2026

இலங்கையின் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்படும் வெளிநாட்டு செலாவணி வருவாய், 2026 மார்ச் மாதத்தில் 223.7 மில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைந்துள்ளது.

Parliament

இலங்கை நாடாளுமன்ற முறைகேடுகள்: சர்வதேச அமைப்புகளிடம் முன்னாள் எம்.பி.க்கள் முறைப்பாடு

April 18, 2026

நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் நிர்வாக முறைகேடுகள், பழிவாங்கல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான நான்கு பிரதான விடயங்களை முன்வைத்து, முன்னாள்

photo-collage.png (12)

கனடாவில் கல்முனை பிராந்திய மக்களின் மரநடுகை விழா

April 18, 2026

இன்றைய தினம்(18) கனடா மிசிஸாக்காவில் கல்முனை பிராந்திய மக்களின் மரநடுகை விழா கனேடிய நேரம் காலை 10 மணி தொடக்கம்

net

நெத்தலியாறு விவசாயிகள் ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை

April 18, 2026

தமது சொந்தக் காணிகளிலேயே சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதியைப் பெற்றுத்தருமாறு கல்மடுக்குளத்தின் சிறுபோக நீர்ப்பாசன பங்காளர்களான விசுவமடு மேற்கு கமக்கார

ds

வடக்கு, கிழக்கு சிகையலங்கார நிலைய சம்மேளனங்களை இணைப்பது குறித்து ஆய்வு

April 18, 2026

வடக்கு – கிழக்கு மாகாணத்தில் உள்ள அழகக சம்மேளனங்களை இணைத்து ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்

ind

இலங்கை விஜயத்தின் போது இந்திய துணை குடியரசு தலைவர் இந்திய வம்சாவளி தமிழர்களை நோக்கி நேசக்கரம் நீட்டுவார்- இந்திய தூதுவர்

April 18, 2026

பரந்த அளவிலான இராஜதந்திர மற்றும் மக்கள் நலன் சார்ந்த பயணமாக, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள்

chaco

நிலக்கரி முறைகேடு; அடுத்த வாரம் விசாரணை ஆரம்பம்

April 18, 2026

இலங்கையில் நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தி நடவடிக்கைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்

cana gu

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற துப்பாக்கிச் சூடு: ஆறாம் ஆண்டு நினைவேந்தல்!

April 18, 2026

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற பகுதியில், பொலிஸ் அதிகாரி வேடமணிந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளைஞர்

her

லெபனானில் பிரெஞ்சு அமைதிப்படை சிப்பாய் பலி: ஹிஸ்புல்லா மீது மக்ரோன் குற்றச்சாட்டு

April 18, 2026

தெற்கு லெபனானில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில், சர்வதேச அமைதிப்படைப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர்

sea

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க கடலில் குதித்த நபர் உயிரிழப்பு

April 18, 2026

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், பொலிஸாரிடம் சிக்காமல் இருக்க கடலில் குதித்த நிலையில், நீரில்

Parl

இலங்கை அமைச்சரவையில் மாற்றங்கள்?

April 18, 2026

நிலக்கரி கொள்முதல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குமார ஜெயக்கொடி பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்த வெற்றிடத்திற்குத் துறைமுகங்கள் மற்றும் விமான