நிலக்கரி கொள்முதல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குமார ஜெயக்கொடி பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்த வெற்றிடத்திற்குத் துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் டாக்டர் அனுர கருணாதிலக்க நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிசக்தி அமைச்சராக டாக்டர் அனுர கருணாதிலக்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாக்டர் கருணாதிலக்க ஒரு சிறந்த கல்வியாளர் ஆவார். அவர் களனிப் பல்கலைக்கழகத்தின் கணிதத் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக நீண்ட காலம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நியமனத்தைத் தவிர, மேலும் பல அமைச்சரவை பதவிகளிலும் மாற்றங்கள் செய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாற்றம் அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களைக் குறைப்பதற்கும் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்படும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.