ரயில் கடவைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ மாணவி

24 வயதுடைய இளம் மருத்துவ மாணவி ஒருவரின் சடலம் காலி, கிந்தொட்டை பகுதியில் உள்ள புகையிரதப் பாதைக்கு அருகில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெலியத்தை பகுதியைச் சேர்ந்த யுத்மினி என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் காலி, கராப்பிட்டிய மருத்துவ பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி பயின்று வந்துள்ளார்.

கடந்த நவம்பர் 3ஆம் திகதி காலை 7.30 மணியளவில் குறித்த மாணவியின் சடலம் புகையிரதப் பாதைக்கு அருகில் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மரண விசாரணையின்போது, அம்மாணவி அண்மைக்காலமாக அதிகமான கல்விச் சுமை மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொண்டிருந்தமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்த மாணவியின் தந்தை மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் சாட்சியமளிக்கையில், தனது மகள் உயர்தரப் பரீட்சையில் மூன்றாவது முறையாகத் தோற்றி மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகியிருந்ததாகவும், தற்போது நான்காம் ஆண்டில் கல்வி பயின்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இருதரப்பினரின் விருப்பத்துடன் திருமணப் பதிவு செய்துகொண்ட நிலையில், குடும்பத்தில் எவ்விதமான பிரச்சினைகளும் இருக்கவில்லை எனவும் தந்தை சாட்சியமளித்துள்ளார்.

எனினும், அதிகமான கல்வி மற்றும் வேலைப்பளு காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக அண்மையில் தனது தாயாரிடமும் கணவரிடமும் அவர் தெரிவித்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்திற்கு முந்தைய தினம் தனது குடும்பத்தினருக்கு அவர் அனுப்பியிருந்த சில குறுஞ்செய்திகள் தொடர்பான தகவல்களும் மரண விசாரணையின்போது முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, குடும்பத்தினர் அவரைத் தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. பின்னர் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின்போதே அவரது உயிரிழப்பு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த மாணவியின் உயிரிழப்பு தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பிலிருந்து காலி நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன் தொடர்புடைய சம்பவமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் அவதானிக்கப்பட்ட போதிலும், சம்பவத்தை நேரடியாகக் கண்ட புகையிரத சாரதிகள் எவரும் இல்லாததால் உயிரிழப்புக்கான சூழ்நிலையை உறுதிப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

sa

ரசிகர்​களுக்கு சிறப்பான அனுபவத்​தைத் தரும் ‘ஜான் டோ’ திரைப்​படம் – சஞ்​சனா நடராஜன்

November 8, 2026

அர்​ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா உள்​பட பலர் நடித்​துள்ள ‘ஜான் டோ’ திரைப்​படம் நவ.13-ல் வெளியாக இருக்கிறது.

nas

சூர்​யாவின் திரைப்​படத்தை எப்​படி நிராகரிக்க முடியும்? – நஸ்ரியா

November 8, 2026

சூர்யா நடித்​துள்ள ‘சீன்’ திரைப்​படம் வெளியானது. இதில் நஸ்ரியா, நஸ்​லென் உள்​பட பலர் நடித்​துள்​ளனர். இதன் புரமோஷனில், ‘3 அல்​லது

sa

ரசிகர்​களுக்கு சிறப்பான அனுபவத்​தைத் தரும் ‘ஜான் டோ’ திரைப்​படம் – சஞ்​சனா நடராஜன்

November 8, 2026

அர்​ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா உள்​பட பலர் நடித்​துள்ள ‘ஜான் டோ’ திரைப்​படம் நவ.13-ல் வெளியாக இருக்கிறது.

poc

பொங்கலுக்கு வருகிறது ‘பாக்கெட் நாவல்’

November 8, 2026

தியாகராஜன் குமாரராஜன் – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘பாக்கெட் நாவல்’ படம் 2027 பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

tam

‘தமிழ்ப் படம் 3’ படப்பிடிப்பு தொடக்கம்

November 8, 2026

சி.எஸ்.அமுதல் இயக்கத்தில் மிர்ச்சி சிவாவின் நடிக்கும் ‘தமிழ்ப் படம் 3’ படப்பிடிப்பு இன்று (நவ.5) தொடங்கி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

WhatsApp Image 2026-11-08 at 07.48.18 (1)

சர்வதேச அரங்கில் சாதிக்கும் ஈழத்தமிழ் வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ்!

November 8, 2026

பருத்தித்துறையின் பிரபல வர்த்தகரான விக்னேஸ்வரனின் (விக்னேஸ்வரா களஞ்சியம்) மகன் ஆகாஷ் இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்து சர்வதேச அரங்கில் முத்திரை

seela

ஜனாதிபதி மகா சங்கத்தினரை அவமதித்ததன் விளைவே கொழும்பு வெள்ள அனர்த்தம் – சீலரத்ன தேரர்

November 8, 2026

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் மகா சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தையும் உண்ணாவிரதப் போராட்டத்தையும்

pol

போலந்தில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் உயிரிழப்பு

November 8, 2026

போலந்தில் கிராகோவ் நகர மைய சதுக்கத்தில் சனிக்கிழமை மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

image_6ae4f42214

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் விபத்து: மூவர் மரணம்

November 8, 2026

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்கபொல, மாஹேன பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில்

fds

இந்தியப் பிரஜை போதைப்பொருட்களுடன் விமான நிலையத்தில் கைது!

November 8, 2026

சுமார் 23 கோடியே 14 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ மற்றும் ‘ஹஷீஷ்’ போதைப்பொருட்களை நாட்டுக்கு கடத்தி

warnig

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

November 8, 2026

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற மற்றும் பலத்த மழை காரணமாக, 8 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட

WhatsApp Image 2026-11-07 at 20.31.04

ஒளி நிறைந்த வாழ்வு… மகிழ்ச்சி நிறைந்த தீபாவளி!

November 8, 2026

உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் அனைவருக்கும் Behind Me Media வின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!