“தமிழையும் பெரியார் பெயரையும் வைத்து ஊழல் செய்யும் தி.மு.க!” – முதலமைச்சர் விஜய் கடும் விமர்சனம்!

சென்னை: பெரியார் அறிவுலகத்திற்குப் புத்தகங்கள் வாங்கியதில் திமுக மாபெரும் ஊழல் செய்துள்ளதாக முதலமைச்சர் விஜய் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் விரிவான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்: அவரது பதிவில், “தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே ஊழலின் ஊற்றுக்கண்ணான திமுகதான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட […]
IGP க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நீதவான் உடனடியாக இடமாற்றம்

நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறி பொலிஸ் மா அதிபருக்கு (IGP) எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுத்த கம்பஹா நீதவான் பண்டுல குணரத்ன, நீதிபதிகள் பயிற்சி நிறுவனத்திற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீதிச் சேவை ஆணைக்குழுவின் (JSC) செயலாளர் பிரசன்னா அல்விஸினால் இந்த இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதன் மூலமும், நீதித்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதன் மூலமும் செயல்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு எதிராக […]
குற்றச்செயல் கும்பலின் தலைவரான ’கைவாரு முத்து’ கட்டுநாயக்கவில் கைது

பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் கும்பலின் தலைவரான மனோஜ் முத்துகுமாரண பிரியதர்ஷன என்றழைக்கப்படும் ‘கைவாரு முத்து’ என்பவரை, ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடுகடத்தப்பட்டு வெள்ளிக்கிழமை (06.11.2026) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, விமான நிலையக் குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடுவெல, கொரதொட்ட வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இவர், அப்பகுதியில் இடம்பெற்ற பல கொலைச் சம்பவங்கள் மற்றும் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபராவார். […]
அமெரிக்காவைச் சார்ந்திருப்பக் குறைப்பதற்கு கனேடிய வரவு-செலவுத் திட்டம் உறுதிபூண்டுள்ளது

AFP செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது: நவம்பர் 5, 2026 – இர 23:32 கனடா வியாழக்கிழமை அன்று “பொருளாதார சுதந்திரத்தை” வலியுறுத்தும் ஒரு வரவு-செலவுத் திட்டத்தை வெளியிட்டது. அமெரிக்காவைச் சார்ந்திருப்பத்தைக் குறைப்பது காலமெடுக்கும் என்றபோதிலும், “அந்த மாற்றம் இப்போது தொடங்கியுள்ளது” என்று அது குறிப்பிட்டது. கடந்த ஆண்டு பதவியேற்ற பிறகு பிரதமர் மார்க் கார்னியின் இரண்டாவது வரவு-செலவுத் திட்டம், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையான இடைக்காலத் தேர்தல் தோல்வியைச் சந்தித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. […]
கனேடிய கூட்டாட்சி வரவு-செலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய முன்மொழிவுகள்

பிரதமர் மார்க் கார்னியின் ஆட்சியில் இரண்டாவது முறையாக, கனேடிய அரசாங்கம் தனது முன்மொழியப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தை வியாழக்கிழமை வெளியிட்டது. அதன் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: முதலீடுகள் (Investments) மூலதனத்தை ஈர்ப்பதற்கும் புதுமைகளை ஊக்குவிப்பதற்கும் 51.9 பில்லியன் கனேடிய டொலர் உட்பட, அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்கம் 142.1 பில்லியன் கனேடிய டொலர்களைச் (101.69 பில்லியன் அமெரிக்க டொலர்) செலவிட முன்மொழிந்துள்ளது. மேலும் உள்கட்டமைப்புக்காக 15.1 பில்லியன் டொலர்களும், வாழ்க்கைச் செலவைக் சமாளிக்கும் நடவடிக்கைகளுக்காக 30.6 பில்லியன் […]
கனடாவின் 2027-29 புதிய குடியேற்றத் திட்டத்தை வெளிப்படுத்தியது கூட்டாட்சி வரவுசெலவுத் திட்டம்

ஒட்டாவா (OTTAWA) — அரசாங்கத்தின் இற்றைப்படுத்தப்பட்ட குடியேற்றத் திட்டம், நிரந்தர மற்றும் தற்காலிக குடியிருப்பாளர்களின் சேர்க்கைக்கான பரந்த இலக்குகளைத் தக்கவைத்துக்கொள்வதோடு, ஏற்கனவே விண்ணப்பித்துள்ள 2,00,000 நீண்டகால தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமையை (Permanent status) வழங்க முற்படுகிறது. அரசாங்கத்தின் 2027-2029 குடியேற்ற அளவுகளின் திட்டத்தின்கீழ், ஒவ்வொரு ஆண்டும் 3,80,000 நிரந்தர குடியிருப்பாளர்களும் (Permanent residents) 3,70,000 தற்காலிக குடியிருப்பாளர்களும் (Temporary residents) அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தற்காலிக குடியிருப்பாளர் இலக்குகள் ஒவ்வொரு ஆண்டும் 2,20,000 […]
யாழில் ஒரே வீட்டில் இருவர் சடலங்களாக மீட்பு!

யாழ்ப்பாணம், வேலணை – செட்டிக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சகோதரி மற்றும் சகோதரன் ஆகிய இருவரின் சடலங்கள் இன்றையதினம் (06) மீட்கப்பட்டுள்ளன. 74 வயதுடைய முத்துலிங்கம் புவனேஸ்வரி மற்றும் 73 வயதுடைய சுப்பிரமணியம் பாலசுந்தரம் ஆகிய இருவருமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டைச் சோதனையிட்டபோது, ஆண் வீட்டுக்கு வெளியே உயிரிழந்த நிலையில் காணப்பட்டதுடன், பெண் […]
வடபகுதிக் கடற்பரப்பு சட்டவிரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது

அத்துமீறி நுழையும் சட்டவிரோத இந்திய மீனவர்களாலும், உள்ளூர் சட்டவிரோத கடற்றொழிலாளர்களாலும் வடபகுதிக் கடற்பரப்பு முழுவதும் சட்டவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாகவும், நேர்மையான வழியில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கடற்றொழில் மேற்கொள்ளும் மீனவர்கள் வஞ்சிக்கப்படுவதாகவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு எல்லை தாண்டி வரும் இந்திய இழுவைப்படகுகளின் வருகையை முற்றாக கட்டுப்படுத்த முடியாத இலங்கை கடற்படையின் செயற்பாடு தொடர்பிலுமு் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மிகவும் கடுமையாகக் கண்டித்துள்ளார். நாடாளுமன்றில் வியாழக்கிழமை (05) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கருத்துத் […]
கொழும்பில் உணவகங்களின் தரத்தை உறுதி செய்ய அறிமுகமாகும் க்யூ.ஆர் முறை!

கொழும்பில் உணவகங்களின் உணவுத் தரம் தொடர்பில் முறைப்பாடு செய்ய புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாநகர சபையின் மக்கள் சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள உணவகங்களில் உணவின் தரம் தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்வதற்காக புதிய QR குறியீட்டு முறையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து உணவகங்களிலும் இந்த QR குறியீடு காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன், பொதுமக்கள் அதனை ‘ஸ்கேன்’ செய்து, அதில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதன் […]
ரயில் கடவைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ மாணவி

24 வயதுடைய இளம் மருத்துவ மாணவி ஒருவரின் சடலம் காலி, கிந்தொட்டை பகுதியில் உள்ள புகையிரதப் பாதைக்கு அருகில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெலியத்தை பகுதியைச் சேர்ந்த யுத்மினி என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் காலி, கராப்பிட்டிய மருத்துவ பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி பயின்று வந்துள்ளார். கடந்த நவம்பர் 3ஆம் திகதி காலை 7.30 மணியளவில் குறித்த மாணவியின் சடலம் புகையிரதப் பாதைக்கு அருகில் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான […]