ஜனாதிபதி மகா சங்கத்தினரை அவமதித்ததன் விளைவே கொழும்பு வெள்ள அனர்த்தம் – சீலரத்ன தேரர்

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் மகா சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தையும் உண்ணாவிரதப் போராட்டத்தையும் முன்னெடுத்தபோது அவர்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட கொழும்பு மாநகர சபையின் மேயருக்கு தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் இயற்கையின் தண்டனையாகும் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனசெத பெரமுன கட்சியின் காரியாலயத்தில் சனிக்கிழமை (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அரசியல் தலைவர்கள் தங்களது அரசியல் தேவைகளுக்காக மகா சங்கத்தினரையும் பௌத்த மதத்தையும் பயன்படுத்திக்கொண்டனர். பின்னர் தங்களது தேவைகள் நிறைவேறியதும் மகா சங்கத்தினரைப் புறக்கணித்தனர். அரசியல் தலைவர்களுக்கு ஏதேனும் நெருக்கடி ஏற்படும்போது மாத்திரமே மகா சங்கத்தினரும் விகாரைகளும் நினைவுக்கு வருகின்றனர்.

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி மகா சங்கத்தினர் விஹாரமகாதேவி பூங்காவில் ஆர்ப்பாட்டத்தையும் உண்ணாவிரதப் போராட்டத்தையும் முன்னெடுத்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் கொழும்பு மாநகர சபையின் மேயர் மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டார். அப்போது மகா சங்கத்தினருக்கு ஏற்பட்ட அவமதிப்பை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்தனர்.

ஆனால், தற்போது கொழும்பு நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதைப் பாருங்கள். நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கிக் குளம்போல மாறியுள்ளன. இதனைத்தான் கர்மவினை என்கிறோம். மகா சங்கத்தினரை அவமதித்ததன் விளைவுகளை தற்போது அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் மேயர் என்ன செய்துகொண்டிருக்கின்றார்? நகரின் வடிகால்களை முறையாகச் சுத்தப்படுத்தவில்லை. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. வடிகால்களைச் சுத்தப்படுத்துவதற்குப் பதிலாக அவற்றை முறையாகப் பராமரிக்கத் தவறியுள்ளனர்.

நாங்கள் அறிந்த காலம் முதல் ஒருபோதும் வெள்ளத்தில் மூழ்காத கொழும்பு தேசிய வைத்தியசாலைகூட நேற்று நீரில் மூழ்கியுள்ளது. இதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர் யார்? கொழும்பு மாநகர சபையின் மேயரே இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும்.

மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்தவர்கள், தேர்தலின்போது கொடிகளை ஏந்தியவர்கள், சுவரொட்டிகளை ஒட்டியவர்கள், அவர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்கள் இன்று இந்த நிலைமையைப் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு இப்போது திருப்தியாக இருக்கின்றதா? இன்னும் சிறிது காலம் பொறுத்திருங்கள்.

எதிர்வரும் தேர்தலில் மக்கள் உங்களைப் பதவியிலிருந்து அகற்றிய பின்னரே ஓய்வார்கள் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

sa

ரசிகர்​களுக்கு சிறப்பான அனுபவத்​தைத் தரும் ‘ஜான் டோ’ திரைப்​படம் – சஞ்​சனா நடராஜன்

November 8, 2026

அர்​ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா உள்​பட பலர் நடித்​துள்ள ‘ஜான் டோ’ திரைப்​படம் நவ.13-ல் வெளியாக இருக்கிறது.

nas

சூர்​யாவின் திரைப்​படத்தை எப்​படி நிராகரிக்க முடியும்? – நஸ்ரியா

November 8, 2026

சூர்யா நடித்​துள்ள ‘சீன்’ திரைப்​படம் வெளியானது. இதில் நஸ்ரியா, நஸ்​லென் உள்​பட பலர் நடித்​துள்​ளனர். இதன் புரமோஷனில், ‘3 அல்​லது

sa

ரசிகர்​களுக்கு சிறப்பான அனுபவத்​தைத் தரும் ‘ஜான் டோ’ திரைப்​படம் – சஞ்​சனா நடராஜன்

November 8, 2026

அர்​ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா உள்​பட பலர் நடித்​துள்ள ‘ஜான் டோ’ திரைப்​படம் நவ.13-ல் வெளியாக இருக்கிறது.

poc

பொங்கலுக்கு வருகிறது ‘பாக்கெட் நாவல்’

November 8, 2026

தியாகராஜன் குமாரராஜன் – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘பாக்கெட் நாவல்’ படம் 2027 பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

tam

‘தமிழ்ப் படம் 3’ படப்பிடிப்பு தொடக்கம்

November 8, 2026

சி.எஸ்.அமுதல் இயக்கத்தில் மிர்ச்சி சிவாவின் நடிக்கும் ‘தமிழ்ப் படம் 3’ படப்பிடிப்பு இன்று (நவ.5) தொடங்கி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

WhatsApp Image 2026-11-08 at 07.48.18 (1)

சர்வதேச அரங்கில் சாதிக்கும் ஈழத்தமிழ் வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ்!

November 8, 2026

பருத்தித்துறையின் பிரபல வர்த்தகரான விக்னேஸ்வரனின் (விக்னேஸ்வரா களஞ்சியம்) மகன் ஆகாஷ் இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்து சர்வதேச அரங்கில் முத்திரை

seela

ஜனாதிபதி மகா சங்கத்தினரை அவமதித்ததன் விளைவே கொழும்பு வெள்ள அனர்த்தம் – சீலரத்ன தேரர்

November 8, 2026

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் மகா சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தையும் உண்ணாவிரதப் போராட்டத்தையும்

pol

போலந்தில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் உயிரிழப்பு

November 8, 2026

போலந்தில் கிராகோவ் நகர மைய சதுக்கத்தில் சனிக்கிழமை மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

image_6ae4f42214

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் விபத்து: மூவர் மரணம்

November 8, 2026

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்கபொல, மாஹேன பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில்

fds

இந்தியப் பிரஜை போதைப்பொருட்களுடன் விமான நிலையத்தில் கைது!

November 8, 2026

சுமார் 23 கோடியே 14 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ மற்றும் ‘ஹஷீஷ்’ போதைப்பொருட்களை நாட்டுக்கு கடத்தி

warnig

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

November 8, 2026

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற மற்றும் பலத்த மழை காரணமாக, 8 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட

WhatsApp Image 2026-11-07 at 20.31.04

ஒளி நிறைந்த வாழ்வு… மகிழ்ச்சி நிறைந்த தீபாவளி!

November 8, 2026

உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் அனைவருக்கும் Behind Me Media வின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!