பருத்தித்துறையின் பிரபல வர்த்தகரான விக்னேஸ்வரனின் (விக்னேஸ்வரா களஞ்சியம்) மகன் ஆகாஷ் இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்து சர்வதேச அரங்கில் முத்திரை பதித்து வருகின்றார்.
ஓமானில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை இளையோர் அணியில் யாழ்ப்பாணம் – பருத்தித்துறையைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஆகாஷ் இடம்பிடித்துள்ளார்.
நவம்பர் 5ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இத்தொடருக்காக இலங்கை அணி கடந்த திங்கட்கிழமை(02) ஓமானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.
வடமராட்சி – பருத்தித்துறையை சேர்ந்த ஹாட்லிக் கல்லூரி மாணவன் விக்னேஸ்வரன் ஆகாஷ் இலங்கை கிரிக்கெட் அரங்கில் வளர்ந்துவரும் இளம் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வங்காளதேச அணிக்கு எதிரான தனது அறிமுக இளையோர் ஒருநாள் சர்வதேச போட்டியில் வெறும் 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் முதலாவது சர்வதேச போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார்.
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியில் இடம்பிடித்து இத்தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.