புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அமைந்துள்ள அந்திஸ் மலைகளும் அமேசான் படுகையும் சந்திக்கும் ‘யுங்காஸ்’ மேகக் காடுகளில், அறிவியல் உலகிற்கு இதுவரை அறியப்படாத முற்றிலும் புதிய காட்டுப்பூனை இனம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

தற்கால உயிரியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய இனத்திற்கு ‘லியோபார்டஸ் தில்காயோ’ அல்லது ‘தில்காயோ டைகர் கேட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஒரு நூற்றாண்டில் புதிய காட்டுப்பூனை இனம் ஒன்று உலகளவில் உத்தியோகபூர்வமாக விவரிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

வீட்டுப் பூனையை விட அளவில் சிறியதான இந்த காட்டுப்பூனை, மெலிந்த உடலமைப்பு, புள்ளிகள் நிறைந்த தோல் மற்றும் உருண்டையான காதுகளைக் கொண்டுள்ளது.

டி.என்.ஏ பரிசோதனைகளின்படி, இந்த பூனை இனம் சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே ஏனைய டைகர் கேட் இனங்களிலிருந்து பிரிந்து தனித்துவமாக உருவெடுத்துள்ளது.

அருங்காட்சியகங்களிலும் இல்லாத இனம்: வழக்கமாகப் புதிய பாலூட்டி இனங்கள் கண்டுபிடிக்கப்படும்போது அவற்றின் மாதிரிப் பொருட்கள் அருங்காட்சியகங்களில் இருக்கும். ஆனால், ‘தில்காயோ’ பூனையின் எந்தவொரு மாதிரியும் அருங்காட்சியகங்களில் கூட இல்லாத முற்றிலும் புதிய கண்டுபிடிப்பாகும்.

பொலிவியாவின் ‘செண்டா வெர்டே’ வனவிலங்கு காப்பகத்தில் தன்னார்வலராகப் பணியாற்றிய ஆராய்ச்சியாளர் பாஓலா நோகலேஸ்-அஸ்காரன்ஸ் என்பவரால் இந்த இனம் அடையாளம் காணப்பட்டது.

உள்ளூர்வாசி ஒருவர் சாதாரண பூனைக்குட்டி என நினைத்து நூட்ல்ஸ், சோறு, முட்டை வழங்கி வளர்க்க முயன்று, பின்னர் அது காட்டுப்பகுதி விலங்கு என உணர்ந்து காப்பகத்தில் ஒப்படைத்த பூனையை ஆய்வு செய்தபோதே இந்த புதிய இனம் வெளிச்சத்திற்கு வந்தது.

உள்ளூர் பொலிவிய பழங்குடியின மக்கள் பரம்பரை பரம்பரையாக இந்த பூனையை “தில்காயோ” என்றே அழைத்து வந்துள்ளனர். அவர்களின் பாரம்பரிய அறிவை மதிப்பளிக்கும் வகையில் ஆராய்ச்சியாளர்கள் அதே பெயரை அறிவியல் பெயராகச் சூட்டியுள்ளனர்.

தற்போது தென்னமெரிக்காவில் உள்ள 05 டைகர் கேட் இனங்களும் காடழிப்பு மற்றும் விவசாய நில விரிவாக்கத்தால் வேகமாக அழிந்துவரும் சூழலில், புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ‘தில்காயோ’ பூனையினத்தைப் பாதுகாப்பதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

sa

சவூதி அரேபியா – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் மோதல்

September 18, 2026

சவூதி அரேபியா மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆகிய இரு தரப்புக்கும் இடையே மோதல் தீவிரமாகியுள்ளது. இந்த இருமுனைத் தாக்குதல்களில் சிறுவர்கள்

cat

புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு

September 18, 2026

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அமைந்துள்ள அந்திஸ் மலைகளும் அமேசான் படுகையும் சந்திக்கும் ‘யுங்காஸ்’ மேகக் காடுகளில், அறிவியல் உலகிற்கு

anojan

அனோஜன் விவகாரம் – இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பது என்ன?

September 18, 2026

சவுதிஅரேபியாவில் ஈழத்தமிழர் அனோஜன் சிவராஜாவிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள விவகாரத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து

namal 22222222222

இந்திய அரசாங்கத்தின் நிகழ்வொன்றில் நாமல் கலந்துகொள்ளவேண்டியுள்ளது- பிணை மனுவில் வேண்டுகோள்

September 18, 2026

இந்திய அரசாங்கத்தின் நிகழ்வொன்றிலும் பௌத்தமத நிகழ்வொன்றிலும் பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்துகொள்ளவேண்டியுள்ளதால் அவருக்கு பிணைவழங்கவேண்டும் என அவரது

Judment

இருவருக்கு சொந்தமான 14 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்

September 18, 2026

சட்டவிரோதமான வழிகளில் உழைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், இருவருக்குச் சொந்தமான சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்

phototune.ai_1789733534

எனது மகனை உயிருடன் மீட்டு தாருங்கள் – அனோஜனின் தாயார் ஜனாதிபதிக்கு உருக்கமான வேண்டுகோள்

September 18, 2026

இஸ்லாமிய மதத்தை நிந்தித்து கருத்து பதிவு செய்தமைக்காக சவுதிஅரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராஜா அனோஜனின் தாயார் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க

Judment

மட்டக்குளி கோர விபத்து: காரின் சாரதிக்கு விளக்கமறியல்

September 18, 2026

மட்டக்குளி பகுதியில் பல வாகனங்கள் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம்

doug111

டொரன்டோ மேயர் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் டக் ஃபோர்ட்: 

September 18, 2026

டொரன்டோ மேயர் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் டக் ஃபோர்ட்: ஒன்ராறியோ முதலமைச்சர் டக் ஃபோர்ட், டொரன்டோ மேயர் தேர்தலில் எந்தவொரு

dough ford

வரிகளுக்கு இடையே படித்துப் புரிந்து கொள்ளுங்கள்”: டொரன்டோ மேயர் தேர்தலில் ஒலிவியா சௌவிற்கு ஆதரவு உணர்த்தும் டக் ஃபோர்ட்

September 18, 2026

ஒன்ராறியோ முதலமைச்சர் டக் ஃபோர்ட், வரவிருக்கும் ஒக்டோபர் டொரன்டோ மேயர் தேர்தலை முன்னிட்டு தற்போதைய மேயர் ஒலிவியா சௌவிற்குத் தனது

toronto mayor ele de

டொரன்டோ மேயர் தேர்தல் விவாதம்: சௌ, பிராட்போர்ட் மற்றும் அலெக்சாண்டர் இடையிலான மோதலின் 5 முக்கிய அம்சங்கள்

September 18, 2026

டொரன்டோ மேயர் தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், ‘டெய்லி பிரட் ஃபூட் பேங்க்’ (Daily Bread Food Bank) அமைப்பினால்

toronto mayor election

டொரன்டோ மேயர் தேர்தல்: போக்குவரத்து மற்றும் பொதுப் பாதுகாப்பு குறித்து வேட்பாளர்கள் இடையே சூடான விவாதம்

September 18, 2026

2026 செப்டம்பர் 14 டொரன்டோ மேயர் தேர்தலுக்கான முன்னணி வேட்பாளர்களான தற்போதைய மேயர் ஒலிவியா சௌ (Olivia Chow), கவுன்சிலர்

shanakiyan22

அனோஜன் விவகாரம் – வெளிவிவகார அமைச்சின் மீது சாணக்கியன் கடும் குற்றச்சாட்டு-உயிரை காப்பாற்ற அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டுகோள்

September 18, 2026

இஸ்லாமிய மதத்தை நிந்தித்துக் கருத்து பதிவு செய்தமைக்காக சவுதி அரேபியாவில் கைதுசெய்யப்பட்ட ஈழத்தமிழர் சிவராஜா அனோஜன் என்பவருக்கு மேன்முறையீட்டு வழக்கில்