இந்திய அரசாங்கத்தின் நிகழ்வொன்றிலும் பௌத்தமத நிகழ்வொன்றிலும் பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்துகொள்ளவேண்டியுள்ளதால் அவருக்கு பிணைவழங்கவேண்டும் என அவரது சட்டத்தரணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஸ்ரீலங்கன்எயார்லைன்ஸ் விமானக்கொள்வனவு நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவேளை அவரது சட்டத்தரணிகள் சமர்ப்பித்த பினை மனுவில் நாமல் ராஜபக்ச இந்திய அரசாங்கத்தின் நிகழ்வொன்றில் கலந்துகொள்ளவேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமல்ராஜபக்ச சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சமிந்திர பெர்னாண்டோ நாமல் ராஜபக்சவின் பிணை மனு முன்னர் நிராகரிக்கப்பட்ட பின்னர் விசேட சூழ்நிலைகள் உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது
இந்திய அரசாங்கம் நிகழ்வொன்றில் கலந்துகொள்ளுமாறு நாமல் ராஜபக்சவிற்கு அழைப்பு விடுத்துள்ளது ஆனால் அவர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால் அந்த விஜயத்தை இரத்துசெய்யவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
ஹிங்குராகொட எசலபெரஹராவில் கலந்துகொள்ளுமாறு பிரதம மதகுரு அழைப்பு விடுத்துள்ளார்,எயார்பஸ் கொள்வனவு தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கையில் நாமல் ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என தெரிவித்தார்
(ரி)