மட்டக்குளி பகுதியில் பல வாகனங்கள் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காரின் சாரதி, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, விபத்து இடம்பெற்ற வேளையில் குறித்த காரின் சாரதி போதையில் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.