இருவருக்கு சொந்தமான 14 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்

சட்டவிரோதமான வழிகளில் உழைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், இருவருக்குச் சொந்தமான சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முடக்கியுள்ளது.

குறிப்பிட்ட சந்தேகநபர்களில் ஒருவர் வத்தளைப் பகுதியைச் சேர்ந்தவராவார்.

இவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைத்த 900 இலட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. மற்றைய நபர் தணமல்வில பகுதியைச் சேர்ந்தவராவார்.

இவர் சட்டவிரோதமாக உழைத்த பணத்தில் கொள்முதல் செய்த 350 இலட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய ஜீப் வண்டியை முடக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வத்தளைப் பகுதியைச் சேர்ந்த நபர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக உழைத்த பணத்தில் கொள்முதல் செய்த சொத்துக்கள் தொடர்பாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

ஹுனுபிட்டிய பகுதியில் அமைந்துள்ள 7 பேர்ச்சர்ஸ் காணியும் இரண்டு மாடி வீடும் (சுமார்: ரூ. 400 இலட்சம்)

ஹுனுபிட்டிய, வத்தளை முகவரியில் அமைந்துள்ள 17 பேர்ச்சர்ஸ் காணியும் இரண்டு வீடுகளும் (சுமார்: ரூ. 300 இலட்சம்)

ஹுனுபிட்டிய, வத்தளை முகவரியில் அமைந்துள்ள 5 பேர்ச்சர்ஸ் காணியும் கட்டடமும் (சுமார்: ரூ. 50 இலட்சம்)

காந்தி மாவத்தை, ஹுனுபிட்டிய முகவரியில் அமைந்துள்ள 3 பேர்ச்சர்ஸ் காணியும் கட்டடமும் (சுமார்: ரூ. 70 இலட்சம்)

ஸ்பேசியா ரக கார் (சுமார்: ரூ. 80 இலட்சம்)

விசாரணையின் படி, இச்சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக உழைத்த இச்சொத்துக்களை இன்றிலிருந்து 14 நாட்களுக்கு முடக்குவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தணமல்வில பகுதியைச் சேர்ந்த நபரும் சட்டவிரோதமாகக் கொள்முதல் செய்த சொத்துக்கள் தொடர்பாக, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பணிப்பாளர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

அவ்விசாரணையின் படி, குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தலில் உழைத்த சட்டவிரோதப் பணத்தில் கொள்முதல் செய்த சொகுசு ஜீப் வண்டியை (சுமார்: ரூ. 350 இலட்சம்) விற்பனை செய்வதையோ, பரிமாற்றம் செய்வதையோ அல்லது வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதையோ தடுப்பதற்காக முதல் 14 நாட்களுக்கு முடக்குவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

sa

சவூதி அரேபியா – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் மோதல்

September 18, 2026

சவூதி அரேபியா மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆகிய இரு தரப்புக்கும் இடையே மோதல் தீவிரமாகியுள்ளது. இந்த இருமுனைத் தாக்குதல்களில் சிறுவர்கள்

cat

புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு

September 18, 2026

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அமைந்துள்ள அந்திஸ் மலைகளும் அமேசான் படுகையும் சந்திக்கும் ‘யுங்காஸ்’ மேகக் காடுகளில், அறிவியல் உலகிற்கு

anojan

அனோஜன் விவகாரம் – இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பது என்ன?

September 18, 2026

சவுதிஅரேபியாவில் ஈழத்தமிழர் அனோஜன் சிவராஜாவிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள விவகாரத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து

namal 22222222222

இந்திய அரசாங்கத்தின் நிகழ்வொன்றில் நாமல் கலந்துகொள்ளவேண்டியுள்ளது- பிணை மனுவில் வேண்டுகோள்

September 18, 2026

இந்திய அரசாங்கத்தின் நிகழ்வொன்றிலும் பௌத்தமத நிகழ்வொன்றிலும் பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்துகொள்ளவேண்டியுள்ளதால் அவருக்கு பிணைவழங்கவேண்டும் என அவரது

Judment

இருவருக்கு சொந்தமான 14 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்

September 18, 2026

சட்டவிரோதமான வழிகளில் உழைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், இருவருக்குச் சொந்தமான சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்

ano

எனது மகனை உயிருடன் மீட்டு தாருங்கள் – அனோஜனின் தாயார் ஜனாதிபதிக்கு உருக்கமான வேண்டுகோள்

September 18, 2026

இஸ்லாமிய மதத்தை நிந்தித்து கருத்து பதிவு செய்தமைக்காக சவுதிஅரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராஜா அனோஜனின் தாயார் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க

Judment

மட்டக்குளி கோர விபத்து: காரின் சாரதிக்கு விளக்கமறியல்

September 18, 2026

மட்டக்குளி பகுதியில் பல வாகனங்கள் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம்

doug111

டொரன்டோ மேயர் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் டக் ஃபோர்ட்: 

September 18, 2026

டொரன்டோ மேயர் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் டக் ஃபோர்ட்: ஒன்ராறியோ முதலமைச்சர் டக் ஃபோர்ட், டொரன்டோ மேயர் தேர்தலில் எந்தவொரு

dough ford

வரிகளுக்கு இடையே படித்துப் புரிந்து கொள்ளுங்கள்”: டொரன்டோ மேயர் தேர்தலில் ஒலிவியா சௌவிற்கு ஆதரவு உணர்த்தும் டக் ஃபோர்ட்

September 18, 2026

ஒன்ராறியோ முதலமைச்சர் டக் ஃபோர்ட், வரவிருக்கும் ஒக்டோபர் டொரன்டோ மேயர் தேர்தலை முன்னிட்டு தற்போதைய மேயர் ஒலிவியா சௌவிற்குத் தனது

toronto mayor ele de

டொரன்டோ மேயர் தேர்தல் விவாதம்: சௌ, பிராட்போர்ட் மற்றும் அலெக்சாண்டர் இடையிலான மோதலின் 5 முக்கிய அம்சங்கள்

September 18, 2026

டொரன்டோ மேயர் தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், ‘டெய்லி பிரட் ஃபூட் பேங்க்’ (Daily Bread Food Bank) அமைப்பினால்

toronto mayor election

டொரன்டோ மேயர் தேர்தல்: போக்குவரத்து மற்றும் பொதுப் பாதுகாப்பு குறித்து வேட்பாளர்கள் இடையே சூடான விவாதம்

September 18, 2026

2026 செப்டம்பர் 14 டொரன்டோ மேயர் தேர்தலுக்கான முன்னணி வேட்பாளர்களான தற்போதைய மேயர் ஒலிவியா சௌ (Olivia Chow), கவுன்சிலர்

shanakiyan22

அனோஜன் விவகாரம் – வெளிவிவகார அமைச்சின் மீது சாணக்கியன் கடும் குற்றச்சாட்டு-உயிரை காப்பாற்ற அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டுகோள்

September 18, 2026

இஸ்லாமிய மதத்தை நிந்தித்துக் கருத்து பதிவு செய்தமைக்காக சவுதி அரேபியாவில் கைதுசெய்யப்பட்ட ஈழத்தமிழர் சிவராஜா அனோஜன் என்பவருக்கு மேன்முறையீட்டு வழக்கில்