சென்னை:
தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைமைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) ஆகிய இரு இடதுசாரிக் கட்சிகளும் தங்களது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளன. இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த இடதுசாரி தலைவர்கள் வீரபாண்டியன் மற்றும் சண்முகம், தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
ஆதரவு அளிப்பதற்கான காரணங்கள் குறித்து அவர்கள் கூறுகையில், “மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை மதித்து இந்த முடிவை எடுத்துள்ளோம். தேர்தலில் தோல்வியடைந்தும் பாஜக அரசு கொல்லைப்புறம் வழியாகத் தமிழகத்தில் நுழைய முயல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மீண்டும் ஒரு தேர்தலைத் தவிர்க்கவும், ஆளுநர் ஆட்சியைத் தடுத்துத் தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைய வேண்டும் என்பதற்காகவும் விஜய்யின் தவெக-வை ஆதரிக்கிறோம். இது தவெக அரசுக்கான ஆதரவு மட்டுமே, அவர்களுடன் கூட்டணி இல்லை. அதேவேளையில், மத்திய பாஜக அரசு மாநில உரிமைகளைப் பறிக்க முயலும் போது, நாங்கள் எப்போதும் போல திமுக-வுடன் இணைந்து போராடுவோம்” எனத் தெளிவுபடுத்தினர். விசிக-வைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் பச்சைக்கொடி காட்டியுள்ளதால், தமிழகத்தில் விஜய் தலைமையில் புதிய அரசு அமைவது தற்போது உறுதியாகியுள்ளது.
#CPI #CPIM #LeftParties #Vijay #TVK #BreakingNews #May8 #TamilNaduPolitics #AllianceUpdate #ThalapathyVijay #VijayAsCM #MajorityAchieved #Stalin #AntiBJP #DemocracySaved #ElectionResults2026 #NewGovernmentTN #PoliticalTwist #TamilNews #VijayMakkalIyakkam_