இலங்கையில் இளைஞர்கள் பொருளாதார மேம்பாட்டுடன் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த நாம் தவறிவிட்டோம் – சாணக்கியன்

ந்த நாட்டில் போதுமான பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் தான் எமது இளைஞர்,யுவதிகள் கட்டார்,டுபாய் போன்ற நாடுகளில் தொழில் புரிகிறார்கள்.அவர்கள் இந்த நாட்டில் பொருளாதார மேம்பாட்டுடன் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த மக்கள் பிரதிநிதிகள் ஆகிய நாம் தவறியுள்ளோம்.குறைந்தப்பட்சம் அவர்களின் பாதுகாப்பையேனும் அங்கு உறுதிப்படுத்த வேண்டும்.வெளிநாடுகளுக்கு செல்லும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு, சட்ட அலகு ஒன்றை ஸ்தாபிப்பது அவசியமாகும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். […]

சந்தனக் கட்டை திருட்டு: நீதிமன்ற முன்னாள் பதிவாளர் விளக்கமறியலில்

நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள சந்தனக் மரக் கடத்தல் வழக்கிற்குச் சொந்தமான ஒரு தொகுதி சந்தனக் கட்டைகளைத் திருடிய குற்றச்சாட்டில், வெலிமடை நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளர் ஒருவரை எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஆர்.ஏ.சி.பி. அமரதுங்க உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர், தியத்தலாவை – கீழ் கதுருகமுவ, கிரிமடுவபத்தன, எல்லபெத்தேகல வீதியில் வசிக்கும் எரங்க சஜித் ரணசிங்க என்பவராவார். இச்சம்பவம் தொடர்பாக, கஹவத்தை – வெலிகதுர பகுதியில் வசிக்கும் வெலிமடை நீதவான் […]

இலங்கையின் சிறுவர் பராமரிப்பு உலகளாவிய சாசனத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் – யுனிசெஃப் வரவேற்பு

சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான உலகளாவிய சாசனத்திற்கு (Global Charter for Child Care Reforms) அமைச்சரவை வழங்கிய அங்கீகாரத்தை யுனிசெப் வரவேற்றுள்ளது. இது சிறுவர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள ‘மாற்றுப் பராமரிப்புக் கொள்கை’யை (Alternative Care Policy) மேலும் உத்வேகத்துடன் முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கும் எடுக்கப்பட்ட ஒரு மைல்கல் தீர்மானமாகும். கடந்த பல வருடங்களாக, பராமரிப்புச் சீர்திருத்தங்களை மேம்படுத்துவதற்காக யுனிசெப் நிறுவனம் இலங்கை அரசாங்கத்துடன் கைகோர்த்துச் செயற்பட்டு வருகின்றது. தேசிய மாற்றுப் பராமரிப்புக் […]

சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெருவெளி வயல் பகுதியில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சித்தாண்டியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் நேற்று (07) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று இரவு 7.30 மணியளவில் குறித்த வயல் பகுதியிலுள்ள வாடி (கொட்டகை) ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டனர். இதன்போது, அங்கு சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக துப்பாக்கி ஒன்றினை மீட்டதுடன், சந்தேக நபரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை […]

முல்லைத்தீவில் நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த அஞ்சல் வாகன சேவை குறைபாட்டிற்கு தீர்வாக இன்று முதல் அஞ்சல் வாகனம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் குமாரவேலு அகிலன் தெரிவித்துள்ளார். இன்று (08) அஞ்சல் வாகன சேவை ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு இதன் மூலம் தீர்வு கிடைத்துள்ளதாக நம்பிக்கை வெளியிட்டார். புதுக்குடியிருப்பிற்கான அஞ்சல் பரிவர்த்தனைகள் கடந்த 2021 ஆம் ஆண்டு வரை அஞ்சல் […]

போதைப்பொருள் வலையமைப்பு சுற்றிவளைப்பு

ருமளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் ‘டுபாய் சுத்தா’ என்பவரின் போதைப்பொருள் வர்த்தகத்தில், பண்டாரகம பகுதிக்கான பிரதான விநியோகஸ்தர் உட்பட 7 சந்தேக நபர்களை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் பொதி செய்யப்படும் இடமொன்றை சுற்றிவளைத்த போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது 15 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 50 கிராம் ஹெரோயின் மற்றும் 25 கிராம் ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருட்களை பொதி செய்ய பயன்படுத்தப்படும் விசேட காகிதங்கள், பொலித்தீன் […]

“ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு!” – விஜய்க்கு ஆதரவு தெரிவித்தது விசிக

சென்னை: தமிழக அரசியல் களத்தில் நிலவி வந்த பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தனது முழு ஆதரவை அறிவித்துள்ளது. இதன் மூலம் விஜய்யின் பலம் 118 எம்.எல்.ஏ-க்களாக உயர்ந்துள்ளதால், நாளை (மே 9) அவர் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்பது உறுதியாகியுள்ளது. தவெக-விற்கு ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு அளித்திருந்த நிலையில், விசிக-வின் நிலைப்பாடு குறித்து […]

செம்மணியில் இன்று 3 மனித எலும்பு எச்சங்கள் அடையாளம்

செம்மணி, சிந்துபாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள் இன்று (08) யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், புதிதாக 3 மனித எலும்பு எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, 2 மனித எலும்பு எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் போது 17 மனித எலும்பு எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். சித்துப்பாத்தி இந்து […]

இரு வேறு பகுதிகளில் பெண் ஒருவர் உட்பட இருவர் கொலை

நாட்டின் இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். பிட்டிகல, ஹொரங்கல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 60 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதாலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது காயமடைந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல், திஸ்ஸமஹாராம – கெமுனுபுர பகுதியில் வீடொன்றுக்குள் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் உடலில் […]

பாடசாலை மாணவர்களிடையே பரவும் நோய் தொடர்பில் ஆராய குழு!

தெனியாய பகுதியில் பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை குறித்துக் கண்டறிய, சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட மருத்துவக் குழுவினர் அப்பகுதிக்கு வரவுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுமித் மனதுங்க தெரிவித்துள்ளார். சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய, நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொடவினால் நேற்று (07) மற்றும் இன்று (08) தெனியாய வலயத்தைச் சேர்ந்த 4 பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தெனியாய […]