ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானக்கொள்வனவில் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 29ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச இன்று கொழும்பு மேலதிக நீதவான்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவேளை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
2013ம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது 2மில்லியன் அமெரிக்க டொலர் நிதிமுறைகேடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை நடைபெறுகின்றது.
நிதிமுறைகேடுகளுடன் பணமோசடி வழக்கில் நாமல்ராஜபக்ச சந்தேகநபராக சேர்க்கப்பட்டுள்ளார்.