‘முதல் நீ முடிவும் நீ’, ‘சிங்கப்பூர் சலூன்’, ‘தருணம்’, ‘ஆரோமலே’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் கிஷன் தாஸ் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘சி யூ’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீ வட்சன் இயக்கத்தில் உருவாகும் ‘சி யூ’ திரைப்படத்தில் கிஷன் தாஸ், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அக்ஷயா ஹரிஹரன், கார்த்திக் குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சந்தீப் கே. விஜய் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜெனம் இசையமைக்கிறார். ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டி ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அஜ்மல் கான் – ரியா மற்றும் விஜய் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில் கதை மாந்தர்களின் தோற்றமும்… அவர்களுக்கு இடையே கண்ணாடியில் பிறை நிலவும் பெண்ணும் இடம் பிடித்திருப்பதுடன்… ஒரு பூனை பட்டாம்பூச்சியை பார்த்து வியக்கும் விடயமும் இடம் பிடித்திருப்பதால்…. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.