நல்லூர், மடு திருவிழாக்களுக்கு சிறப்பு போக்குவரத்து சேவைகள்

நல்லூர் திருவிழா மற்றும் மடு திருவிழா ஆகிய இரண்டு முக்கிய திருவிழாக்களுக்கும் சிறப்பு போக்குவரத்துச் சேவைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக , நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் , உரும்பிராய் பகுதியில் புனரமைக்கப்பட்டு வீதியினை கையளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடக்குக்கான புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் , […]

விசேட தேவையுடைய மாணவர்கள் சகல துறைகளிலும் பல்கலைக்கழகக் கல்வியைக் கற்க வாய்ப்பு

இலங்கையில் விசேட தேவையுடைய மாணவர்கள் எதிர்வரும் காலங்களில் மருத்துவத்துறை, பொறியியல் துறை மற்றும் விவசாயத்துறை உள்ளிட்ட தங்களின் திறமைகளுக்கு ஏற்ற எந்தவொரு துறையிலும் பல்கலைக்கழக உயர் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நிதியத்தின் மூலம் விசேட தேவையுடையோர் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் […]

மகளை துஷ்பிரயோகம் செய்த சார்ஜன்ட் பணி இடைநிறுத்தம்

தனது மூத்த மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சேவையை, கடந்த (11) ஆம் திகதி முதல் இடைநிறுத்துவதற்கு மொனராகலை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (iii) பி.யு.பி. மானியம்கம நடவடிக்கை எடுத்துள்ளார். இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டவர், தம்பகல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய, தம்பகல்ல மாரியராவ, எட்டுக் கால் பகுதிக்கு அருகில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் சார்ஜன்ட் கே.ஜி. சமந்த ருவன் குமார ஆவார். […]

கற்பக பிள்ளையார் கோவில் வீதி மக்கள் பாவனைக்குத் திறப்பு

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உரும்பிராய் கற்பக பிள்ளையார் கோவில் வீதி மக்கள் பாவனைக்காக இன்று(12.07.2026) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் ஜெ.ரஜீவன் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளதுடன், வீதியை திறந்து வைத்துள்ளனர். கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் குறித்த 1.5 கிலோமீற்றர் நீளமான பாதை 74.5 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இந்த நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் வீதி அபிவிருத்தி […]

ஈரான் மீது அமெரிக்கா 3ஆவது கட்டமாக தாக்குதல்: 140 இராணுவ நிலைகள் தரைமட்டம்

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் சைப்ரஸ் நாட்டு கொடியுடன் பயணித்த ‘எம்.வி ஜி.எஃப்.எஸ் கேலக்ஸி’ என்ற சரக்குக் கப்பல் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அண்மையில் தீவிர தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலால் கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு அதன் என்ஜின் பகுதி கடுமையாக சேதமடைந்ததுடன், கப்பல் ஊழியர் ஒருவர் காணாமல் போயுள்ளார். ஈரானின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் இந்த வாரத்தில் மூன்றாவது முறையாக ஈரான் மீது […]

துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை; டொராண்டோவின் ‘சல்சா ஒன் செயின்ட் கிளார்ட்’ திருவிழா ரத்து

சனிக்கிழமை நள்ளிரவில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலரைத் தீவிரமாகக் காயப்படுத்திய கொடிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, டொராண்டோவின் புகழ்பெற்ற ‘சல்சா ஒன் செயின்ட் கிளார்ட்’ (Salsa on St. Clair) திருவிழாவின் இறுதி நாள் இன்று அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவ இடத்தில் தங்களது விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதால், இத்திருவிழா இன்று மீண்டும் தொடங்காது என்று டொராண்டோ நகர சபை உறுப்பினர் ஜோஷ் மாட்லோ ஞாயிற்றுக்கிழமை காலை சமூக ஊடகப் பதிவு […]

சிறைச்சாலை மோதல்; உயிரிழந்த அதிகாரிகளுக்கு அரசு வெளியிட்ட திட்டம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நட்டஈடு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது. உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபா என்பது ஆரம்பக்கட்ட நிவாரணக் கொடுப்பனவு மட்டுமே என்று சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு விளக்கம் கொடுத்துள்ளார். உயிரிழந்த அதிகாரிகளின் அனைத்து இறுதிக்கிரியைகளும் சிறைச்சாலைகள் […]

மலையகத் தமிழர்களின் காணி உரிமை தொடர்பில் அரசு தனது கொள்கையை அறிவிக்க வேண்டும்

பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் காணி உரிமை தொடர்பில் தற்போதைய அரசு தனது உண்மையான கொள்கையை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்தினார். இது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறுகையில், “எங்கள் மக்கள் ‘தேவதூதர்கள் வந்துவிட்டார்கள்’ என நம்பி இந்த அரசுக்கு வாக்களித்தனர். ஹட்டன் பிரகடனத்தில் காணி உரிமை குறித்துக் கூறி வாக்குகளைப் பெற்ற அரசு, தற்போது அது […]

விளையாட்டு மைதானத்தில் கைகலப்பு

ட்டன் டன்பார் மைதானத்தில் நடைபெற்ற ‘ஹட்டன் லீக் மேயர் கோப்பை’ (Mayor’s Cup) கால்பந்துப் போட்டியின் இரண்டாவது சுற்றுப் போட்டியின் போது, இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் மைதானமே போர்க்களமாக மாறியது. ஹட்டன் ‘யங் மேட்ஸ்’ (Young Mates) மற்றும் நோர்வூட் ‘சன்ரைஸ்’ (Sunrise) ஆகிய விளையாட்டுக்கழகங்களுக்கு இடையே சனிக்கிழமை (11) அன்று நடைபெற்ற போட்டியின் போதே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. போட்டி முடிவடைய இன்னும் ஏழு நிமிடங்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் இக்கலவரம் […]

பிரபல பாடசாலை வளாகத்தில் மர்ம அறை?

கம்பொல பகுதியில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் வளாகத்தில், கழிவுநீர் குழாய் பதிப்பதற்காக நிலத்தைத் தோண்டியபோது, நிலத்திற்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான அறை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த விசித்திரமான சம்பவம் குறித்து, பாடசாலையின் அதிபர் கம்பொல பொலிஸாரிடமும், வலயக் கல்வி அலுவலகத்திலும் முறைப்பாடு செய்துள்ளார். தற்போது வேகமாக பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து இரண்டரை ஏக்கர் பரப்பளவு கொண்ட பாடசாலை மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன்போது, […]