லிவர்பூல், நவம்பர் 21, 2026 – நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தமிழீழத் தேசியக் கொடி நாள் நிகழ்வு திரு. அந்தோனிப் பிள்ளை அல்பிரட் அன்ரனி ( வீரன் ) மாவீரர் போராளிகள் குடும்ப நலன்புரி அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் யோகன் ரட்ணம் தலைமையில் நடைபெற்றது.
பிரித்தானியக் கொடியை நாடுகடந்த தமிழீழ அரசின் பாராளுமன்ற உறுப்பினரும் உலக தமிழர் வரலாற்று வளாக தோற்றுவிப்பாளரும் ஆன குணசீலன் வன்னியசிங்கமும்
தமிழீழக் கொடியை நாடு கடந்த தமிழீழ அரசின் முன்னே நாள் இளையோர் அமைச்சரும், உலகத் தமிழர் வரலாற்று வளாக பணிப்பாளரும் ஆன அகிலவானார் அம்பலவாணரும் ஏற்றினர்.
எம்.பி.க்கள், செயற்பாட்டாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்வு தேசிய அடையாளத்தைப் பாதுகாக்கும் உறுதியை வெளிப்படுத்தியது.